வழக்காடுவோம் வாருங்கள் COME, LET US REASON TOGETHER 55-1004 செவ்வாய்க்கிழமை மாலை, அக்டோபர் 4, 1955 லேன் டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் வழக்காடுவோம் வாருங்கள் (55-1004) விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள் எல்லாமே சாத்தியம், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள்... (...?... நன்றி சகோதரர் போஸ்.) விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள்... நாம் ஒரு நிமிடம் தலைகளைத் தாழ்த்தி, ஒரு வார்த்தை ஜெபம் செய்வோமா? எங்கள் பரலோகப் பிதாவே, இந்த இரவு வேளையில், மீண்டும் ஒருமுறை கூடிவந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மேலும், எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆச்சரியமான கிருபையினால், பகல் நேரத்தின் உழைப்பு களிலும் ஆபத்துகளிலும் எங்களைக் காத்து, ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்கும் பழைய முறைமையின் அழகிலே உம்மை ஆராதிக்க இந்த இரவில் மீண்டும் இந்தச் சபையிலே எங்களை நிறுத்தியிருக்கிறீர். இவைகளுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது, ஆண்டவரே, நாங்கள் எங்களை உமக்கு முன்பாகத் தாழ்த்தி அர்ப்பணிக்கிறோம்; கர்த்தராகிய இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத் தினால், ஒவ்வொரு பாவமும் மன்னிக்கப் படவும், எங்களுடைய ஒவ்வொரு - எல்லா அக்கிரமங்களும் இரத்தத்தின் கீழே மறைக்கப் படவும், மேலும், நாங்கள் இங்கிருந்து செல்லும் போது, எம்மாவுவிலிருந்து வந்தவர்களைப் போல, "வழியிலே அவர் நம்மோடு பேசும் போது நம்முடைய இருதயம் நமக்குள்ளே பற்றி எரியவில்லையா" என்று நாங்கள் சொல்லத் தக்கதாக, பரிசுத்த ஆவியானவர் இந்த இரவில் ஒவ்வொரு இருதயத்திலும் பரிபூரணமாகச் செயல்பட அவருக்கு முழு உரிமை கிடைக்க வேண்டும் என்றும் ஜெபிக்கிறோம். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2 இனிய மாலை வணக்கம், நண்பர்களே. சிக்காகோவில் நடைபெறும் கூட்டத்தின் இந்த செவ்வாய் இரவில், மீண்டும் இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் சகோதரர் போஸ் அவர்கள், பிலதெல்பியா சபையோடு இணைந்து இங்கு நடத்தும் மாநாட்டின் இந்த மாபெரும் எழுச்சிக் கூட்டம். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை உறுதிசெய்வதற்காக, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அவர் என்னிடம் பேசியிருந்தார். சில நிமிடங்களுக்கு முன்பு நாங்கள் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது அவர் அங்கே நின்று கொண்டிருந்தார், ஒருவேளை அவருடைய பத்திரிகைக்காக இருக்கலாம், அது... அவர் இன்று போதகர்களைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார், நேற்றிரவு கூட்டத் தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார், இந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் எவ்விதமான ஆச்சரியமான முறையில் செயல்படுகிறார் என்பதைப் பற்றி. நான் பேச நினைத்திருந்த சில காரியங்களை அது கொஞ்சம் மாற்றிய மைத்தது. ஒருவேளை நான் அதைப் பற்றி சில நிமிடங்கள் பேசுவேன். 3 உங்களுக்குத் தெரியும், எல்லாவற்றிற்கும் மேலாக போதகர்கள் மந்தையின் மேய்ப்பர் களாக இருக்கிறார்கள். அது-அது சரிதான். அவர்கள் மட்டும்... நீங்கள் ஒரு குழுவில் சேர்ந்தால்... நான் பலமுறை பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், அங்கு சந்தேகப்படும்படியான பிரசங்கிமார்களைப் பார்க்க நேரிடும். நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் வீட்டிற்கே சென்றுவிடலாம், ஏனென்றால் கூட்டம் வீணாகி விட்டது. ஆனால் அவர்கள் ஒரே சிந்தையோடு இருக்கும்போது நீங்கள் அவர்களைக் கண்டால், எல்லோரும்... பின்பு நான் உங்களுக்குச் சொல்கிறேன், பூமியில் இதைவிட இனிமை யானது வேறெதுவும் இல்லை. மேய்ப்பர்களைப் பாருங்கள்... சரி, அவர்களுக்குச் சந்தேகப்பட உரிமை உண்டு. பாருங்கள், அவர்கள் ஆடுகளுக்கு, மந்தைக்கு உணவளிக்கிறார்கள். அதனால் நான் அவர்களைக் குறை சொல்ல வில்லை. எனக்குச் சந்தேகம் இருந்தால், எனக்குச் சந்தேகம் இருக்கிறது என்று நான்-நான் சொல்வேன். ஆகவே நான்-நான் அவர்களைக் குறை கூறமாட்டேன். அவர்கள் மந்தையின் மேய்ப்பர்கள். தேவன் அவர்களை ஆசீர்வதிப் பாராக என்பதே என் ஜெபம். அவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்திருக்க வேண்டும், ஏனென்றால் ஆடுகள் குப்பைகளை உண்ணக்கூடிய ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும், எனவே நீங்கள் அவர்களுக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையான வார்த்தையைக் கொடுங்கள். அதுதான் சரி. அதுதான் - நகரத்தில் உள்ள அனைத்து மருந்துக்கடைகளில் இருப்பதையும் விட இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன, அதுவே ஜீவனுள்ள தேவனின் உண்மையான வார்த்தை. இப்போது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கி றோம். நேற்று மாலை, நான்-எனது நண்பர் ஒருவருடன் இருந்தேன், அவர் கூட்டங்களுக்குப் பிறகு, கூட்டங்களைப் பற்றியும், மற்றும் வேறொரு இடத்தில் நடக்கும் மற்றொரு மாநாட்டிற்காகவும் வந்திருந்தார். எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, நான் ஏதோ ஒரு கிழக்கு மாகாணத்தில், வெகு தொலைவில் இருக்க வேண்டியிருந்தது. நான்-நான் பார்த்த எந்தவொரு நபரைக் காட்டிலும் அதிகமாகப் பல இடங்களுக்குச் செல்பவனாக இருக்கிறேன். 4 சென்ற நாள், ஒரு குறிப்பிட்ட நகரத்தி லிருந்து ஒரு பெண்மணி என் மனைவியை அழைத்து, "சகோதரி பிரன்ஹாம், சகோதரர் பிரன்ஹாமுக்கு ஏதாவது-ஏதாவது நேர்ந்து விட்டதா?" என்று கேட்டார். அவள், "எனக்குத் தெரிந்தவரை இல்லை, ஏன்?" என்றாள். அதற்கு அவள், "சரி, அவர் இங்கே வந்திருக்க வேண்டும். இது மூன்றாவது இரவு, நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம், மேலும்..." என்றாள். அவள், "என்ன?" என்றாள். "ஆம்," என்று அவள் சொன்னாள், "இந்த சபையின் போதகர்," இங்குள்ள இந்தப் பெண் போதகர், நேற்றிரவு அவரிடம் பேசிக் கொண்டிருந்ததாகச் சொன்னாள், "இங்கே செய்தித்தாள்களிலும் எல்லாவற்றிலும் விளம் பரம் செய்யப்பட்டுள்ளது" என்று சொன்னாள். "அவர் இங்கே வந்திருக்க வேண்டும்" என்றாள். அதனால் அந்த-அவள் கூறினாள், "சரி, என்னை மன்னிக்கவும், அவர் இரண்டு வாரங்களாக ஜெர்மனியில் இருக்கிறார், மேலும் இதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது..." 5 உங்களுக்குத் தெரியும், அது என்னை மிகவும் மோசமாகப் பாதிக்கிறது. அந்தக் காரியங்களுக்காக நீங்கள் அனைவரும் என்னைப் பற்றித் தவறாக நினைக்கக் கூடாது என்று விரும்புகிறேன். நேற்றிரவு ஒரு நண்பர்-அதைப்பற்றித்தான் அவர் என்னைக் கடுமை யாகக் கண்டித்தார்; "நீங்கள் உங்கள் வாக்குறு திகளைக் காப்பாற்றுவதில்லை" என்றார். சரி, இது ஒரு கடினமான விஷயம். மேலும் நான்-நான்-அதில் பெரும்பாலானவை என் தவறுதான் என்று நான்-நான் கருதுகிறேன். மேலும்-ஆனால் அதில்... அதில் சில என் தவறு அல்ல. (நன்றி) அதில் சில என் தவறு அல்ல, ஏனென்றால் நான் அதைப் பார்த்திருக்கிறேன்-ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு வெவ்வேறு இடங்களில் அது விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். ஒரு கணம் உங்களுக்கு ஒரு சிறிய உள்ளர்த்தத்தைக் கூறுகிறேன், நீங்கள் அதைக் கேட்பீர்களா? நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் நின்றுகொண்டிருக்கும்போது, இந்த அறையில் இருக்கும் ஒருவர் வந்து, "கர்த்தர் என்னிடம் கூறினார், சகோதரர் பிரன்ஹாம், நீங்கள் இந்த இடத்திற்கு, எங்கள் இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் அவர் உங்கள் ஊழியத்தைத் துண்டித்துவிடுவார். அது கர்த்தர் உரைக்கிற தாவது," என்று சொல்வதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? இந்த அறையில் உள்ள மற்றொருவர், "இல்லை, அவள் சொல்வது தவறு. கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் இங்கே வர வேண்டும்," என்று சொல்கிறார். மேலும் இந்த அறையின் பின்பகுதியில் உள்ள மற்றொருவர், "இல்லை, அவர்கள் இருவருமே தவறு," என்று கூறுகிறார். பார்க்கி றீர்களா? கொஞ்ச நேரம் அதைச் சகித்துக் கொள்வது உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ள விரும்பமாட்டீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பமாட்டீர்கள். ஆனால் நான்-நான் உங்களுக்குச் சொல்கிறேன், சில நேரங்களில் உங்களுக்கு அதிகப் பொறுமை இருப்பது நல்ல விஷயமே. 6 அதன் பின்பு, சிலர் கடிதம் எழுதி, "இப்போது, சகோதரர் பிரன்ஹாம், நாங்கள் ஏற்கனவே விளம்பரம் செய்துவிட்டோம். நீங்கள் இங்கே வரப்போகிறீர்கள் என்று கர்த்தர் சொன்னார்," என்று கூறுவார்கள். சரி, அவர் அப்படிச் சொல்லியிருந்தால், அதைப் பற்றி அவர் என்னிடமும் ஏதாவது சொல்லியிருக்க வேண்டுமே, உங்களுக்குத் தெரியுமல்லவா. ஆகவே அவர்-அவர்-அவர்-அவர் விரும்பும் போது என்று நான் நம்புகிறேன்... ஆனால் அது அப்படித்தான் நடக்கிறது... எனக்கு உண்மையாகத் தேவை யானது, கூட்டங்களை உண்மையிலேயே விளம்பரப் படுத்தக்கூடிய எனது சொந்தப் பத்திரிகை ஒன்று எங்கேயாவது இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் நண்பர்களே, நான்-நான் ஒரு வியாபாரி அல்ல. என்னால் எப்படி ஒரு பத்திரிகையை நடத்த முடியும்? ஒரு பத்திரிகையை நடத்துவது ஒருபுறம் இருக்கட்டும், ஒரு காரை ஓட்டுவதற்குப் போதுமான புத்திசாலித்தனம்கூட என்னிடம் இல்லை, அதனால்... ஒருமுறை நான் ஒன்றை ஆரம்பித்தேன், பிறகு அதைக் கைவிட்டு விட்டேன், "சுகமளிக்கும் சத்தம்". ஆகவே நான் சும்மா-எங்கெல்லாம் அது வெளிவருகிறதோ... 7 ஆனாலும் என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள், எப்படியிருந்தாலும் என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறேன். ஆகவே நீங்கள்-ஏதேனும் கூட்டங்கள் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அது அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்றால், அது இங்கே இந்த "விசுவாசத்தின் தூதன்" பத்திரிக்கையில், சகோதரர் ஜோசப் மூலம் வரும், ஏனென்றால் அவர் எப்போதும் திரு. மூர் அவர்களை அழைப்பார். கூட்டங்களுக்கான எந்த ஏற்பாடுகளையும் நான் செய்வதில்லை. நான் அதை வெறும் பொதுவான கட்டளைகளின் பேரில்தான் செய்கிறேன். எப்படியிருந்தாலும், திட்டமிடப்பட்ட கூட்டங் களை-வைப்பது எனக்கு மிகவும் கடினமான ஒன்று. அமெரிக்காவில் இருக்கும்போது-குறிப்பாக அமெரிக்காவில்-என்னால் முடிந்தால், தேவன் எனக்கு உதவினால், வேறொரு வகையான ஊழியத்திற்குள்-முன்னேறிச் செல்ல இப்போது நான் என்னால் முடிந்த வரை முயற்சிக்கிறேன். மேலும் செய்யப்பட்ட இந்த அடையாளங்களும் அற்புதங்களும், மற்றும் ஆச்சரியமான காரியங் களும், அது-அது-நாம் பேசியவை. இப்போது, எட்டு அல்லது பத்து வருடங்களாக இது தேசமெங்கும் பரவியுள்ளது, அதைப்பற்றி அனைவருக்கும் தெரியும். நான் நமது ஆண்டவரிடம் கேட்கிறேன், அவருடைய வியாதியுள்ள பிள்ளைகளுக்காக ஜெபிக்க மட்டும் அவர் என்னை அனுமதித்தால், அதோடு அதை நான் முடித்துக்கொள்வேன். அப்போது என்னால் ஏற்பாடுகளைச் செய்ய முடியும். 8 ஆனால் நண்பரே, இந்த வகையான ஊழியம் என்பது, நீங்கள் நினைப்பதைப் போன்றது அல்ல, இது வித்தியாசமான ஒரு ஊழியமாகும். என்னால் எதற்கும் ஏற்பாடு செய்ய முடியாது, ஏனென்றால் அவர் என்னிடம் என்ன சொல்லப்போகிறார் என்று எனக்குத் தெரியாது. நான்-கூட்டங்களின் நடுவிலேயே இருந்திருக்கிறேன், அங்கு இது-பால்கனி யாகவோ அல்லது பாடகர் குழுவாகவோ இருக்கும், பெரும்பாலும், இரண்டு நாட்க ளுக்குப் பிறகு அங்கேயே நிறுத்திவிட்டு வேறு எங்காவது செல்வேன், ஏனென்றால் அவர் எனக்கு அப்படிச் சொன்னார், அதை நான் செய்வதுதான் நல்லது. நான் அதைச் செய்யாததால் பலமுறை என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே நான் அதைச் செய்தே ஆகவேண்டும், சும்மா... சகோதரர் ராபர்ட்ஸ், பில்லி கிரஹாம் மற்றும் அவர்களைப் போன்ற பலரைப் போல என்னால் கூட்டங்களை அமைக்க முடியாது, அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தங்களின் கூட்டங்கள் எங்கே நடை பெறப்போகிறது என்பதைச் சரியாக அறிந்திருப் பார்கள். நான் அப்படி ஒரு பயணத்திட்டத்தை உருவாக்கினால், கர்த்தர் எனக்கு என்ன செய்வார் என்று சொல்வது கடினம். நான் சும்மா போகவேண்டும், சரி, சும்மா... நான் எங்காவது போகவேண்டும் என்று வழிநடத்தப் படுவதை உணர்ந்தால், நான்-நான் அதைக் குறித்து அவரிடம் கேட்பேன். அவர் என்னைப் போக அனுமதித்தால், நான் உடனே புறப்படு வேன்; அவ்வளவுதான். மேலும் அது ஒரு குறுகிய முன்னறிவிப்பில்தான் இருக்கும். பொதுவாக, நான் சகோதரர் மூர் அவர்களை அழைப்பேன். யாராவது தேதிகளையோ அல்லது கூட்டங்களையோ கேட்டால், அவர்கள் அவரை அழைக்கிறார்கள், அதன் பின் நான் அவர் மூலமாகவே செயல்படுகிறேன். நான் எங்காவது செல்வதற்கு ஒரு வழிநடத்துதலைப் பெற்றால், ஓ, அது ஒரு குறிப்பிட்ட நகரமாக இருந்தால், நான் அவரை அழைத்து, "பரிசுத்த ஆவியானவர் என்னை அந்த வழியில் வழிநடத்துவது போல் தெரிகிறது, அங்குள்ள தொடர்பு என்ன?" என்று கேட்பேன். சரி, பின்பு, அவர் என்னிடம் சொல்வார், அதன்பிறகு நாங்கள் அவர்களைத் தொடர்பு கொள்வோம். பின்னர் எங்களுக்கு நேரம் இருந்தால், அதை நாங்கள் பத்திரிகையில் போடுவோம், நேரம் இல்லையென்றால், நிச்சயமாக எங்களால் அதைச் செய்ய முடியாது. 9 இப்போது, போதகர்களுக்காக ஒவ்வொரு நாளும் இரவில் சற்றுப் பேசலாம் என்று நினைத்தேன். இதில் விசுவாசிகள் என்னைப் பொறுத்துக்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் வாழ்க்கையில் நான் ஒரு சிறப்பான போதகர் கூட்டத்தைச் சந்தித்தி ருக்கிறேன், குறிப்பாக இங்கு சிகாகோவைச் சுற்றிலும். நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் சிலர் தேவனுடைய ஊழியர்களாக, இந்த நாட்டின் பகுதிகளில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், உலகம் முழுவதிலும் இருந்திருக் கிறார்கள். நான் இப்போது நற்செய்தி அறிவிக்கும் முறையிலான கூட்டங்களுக்கு மாறக் கடினமாக முயற்சிக்கிறேன், வெறும் பிரசங்கிப்பதற்காக, மற்றும்-மற்றும் மக்களைக் கூப்பிட்டு அவர்களுக்காக ஜெபிப்பதற்காக மட்டுமே. மேலும்-பரிசுத்த ஆவியானவர் எனக்குக் கொடுத்துள்ள இந்தச் சிறிய வரத்தின்-செயல் பாட்டைக் குறித்து பலமுறை பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டுள்ளன. ஓ, யாரும் அதை விளக்க முடியாது, ஆனால் ஒவ்வொரு நாளும் இரவில் என்னால் முடியுமானால், தேவனுக்குச் சித்தமானால், ஒரு சிறிய செய்திக்கு முன்பாக, வியாதிஸ்தர்களுக்காக நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, உங்களுக்கு ஒரு சிறிய கருத்தைக் கொடுக்க முயற்சிப்பேன். 10 இப்போது, இன்றிரவு நான் நினைத் தேன்... நேற்றிரவு அது இறங்கி வரும் ஆச்சரியமான நிகழ்வைக் குறித்து, புகைப் படங்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். இப்போது, இன்றிரவு, அதன் மற்றொரு பதிப்பைப் பற்றி-பத்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, "வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளே" என்பதை நான் இப்படித்தான் அடிப்படையாகக் கொள்கிறேன். பார்க்கிறீர்களா? இப்போது, நீங்கள்... வரங்கள் மக்கள் விரும்பு வதற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்படுவ தில்லை. "விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவ னாலுமல்ல, இரங்குகிற தேவனாலேயே ஆகும்." பார்க்கிறீர்களா? மேலும் "வரங்களும் அழைப் புகளும் மாறாதவைகளே." போதகர்கள் உண்மையிலேயே தேவனால் அழைக்கப்பட்டிருந்தால், அவர்கள் போதகர் களாக இருப்பதைக் குறித்து அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. பவுல் சொன்னார், "சுவிசேஷத்தை நான் பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ." அவர்கள் போதகர்களாக இருக்கிறார்கள், ஏனென்றால்-ஒருவேளை விருப் பத்தினால் அல்ல, பரிசுத்த ஆவியானவர் அவர்களைப் போதகர்களாகும்படி அழைத்திருப் பதனாலேயே. 11 நான்-நான்-என் மகன்கள் இருவரில் ஒருவர்கூட, அவர்கள் தூரமாய்ச் சென்று நிறைய உளவியலையும், அது போன்ற சில காரியங்களையும் கற்றுக்கொண்டு, வெளியே சென்று மக்களுக்காக ஒரு நாடகம் நடிக்க வேண்டியிருந்தால், அவர்கள் போதகர்களாக இருக்க நான் விரும்பமாட்டேன். அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் கீழ் பிரசங்க பீடத்திற்குச் சென்று, கர்த்தராகிய இயேசுவை நேசிப்பதனால் மட்டுமே பிரசங்கிக்க வேண்டும் என்று நான் விரும்பு கிறேன். உணவுக்கான ஒரு சீட்டுக்காக அல்ல, அவர்கள் கர்த்தரை நேசிப்பதனாலேயே, தேவனுடைய ராஜ்யத்திற்கு என்ன நன்மை செய்ய முடியுமோ அதற்காக அதைச் செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து, நான்-நான் அவர் ஒரு பேராயராகவோ அல்லது-அவர் யாராக இருந்தாலும், அப்படி ஆவதை நான் விரும்பமாட்டேன். ஆகவே-இப்போது, பலமுறை என்னிடமும், என் நெருங்கிய கூட்டாளிகளிடமும் இந்தக் கேள்வி வந்திருக்கிறது, அவர்கள் அப்படி நினைக்கவில்லை என்று என்னிடம் கூறும் போது, இருந்தபோதிலும், பல நேரங்களில்... நான் பலரைச் சந்திக்காததற்குக் காரணம், அந்த அபிஷேகம் என்மீது இருக்கும்போது நான் அறிய விரும்பாத காரியங்களை நான் கண்டுகொள்கிறேன். பார்க்கிறீர்களா? 12 என் முதுகில் தட்டிக்கொடுத்து, என்னைச் சகோதரா என்று அழைத்த போதகர்களை நான் சந்தித்திருக்கிறேன், ஆனால் அது தவறு என்பதை அந்த நொடியிலேயே நான் அறிந்திருந்தேன். நான் அவர்களை நேசிக்க விரும்புகிறேன்; நான் அப்படி நினைக்க விரும்பவில்லை. நான் அதை அறியும்போது, நான்-நான் அதை அறியாமலிருக்கவே விரும்புவேன். நான் மக்களைச் சந்திக்காமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். மற்றொரு காரியம், தரிசனங்கள் காண்பிக்கின்றன, மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பாத காரியங்களை நீங்கள் காண்கிறீர்கள். அதைப்பற்றி எதையும் அறியாமலிருப்பதே எனக்கு நல்லது. நான் மக்களை நேசிக்கிறேன்; எல்லோரையும் அரவணைத்துக்கொள்ளவே விரும்புகிறேன், மற்றும்-மற்றும் நான்-நான் அவர்களை நேசிக்கிறேன். நான் மிகவும் உயர்ந்ததையும் சிறந்ததையுமே நினைக்க விரும்புகிறேன். ஆனால் சில நேரங்களில், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில சிறிய ரகசியங்கள் உள்ளன, அப்படியான நேரங்களில், அதை மறைக்க முடியாது. 13 மேலும் இப்போது, ஒரு காரியம்-ஒரு வினோதமான விஷயம் என்னவென்றால், என் நெருங்கிய கூட்டாளிகள் எப்போதும் நினைத்தார்கள் (அவர்கள் அனைவரும் அல்ல, நிச்சயமாக இல்லை, ஆனால் அநேகர்), பிரசங்க மேடையில் நான் சோர்வடைவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை: "ஏன் ஒரு சில முறையிலேயே நீங்கள் சோர்ந்து போகிறீர்கள்?" அநேக மனிதர்கள் என்னிடம், "சகோதரர் பிரன்ஹாம், நீங்கள் வேண்டுமென்றே தாமதப் படுத்துகிறீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்கள். சரி, நான் அப்படிப்பட்ட ஒரு மாய்மாலக்காரனாக இருந்தால், இன்றிரவு நான் இந்த மேடையிலிருந்து வெளியேறி விடுவேன். ஆம், ஐயா. இல்லை, ஐயா, அது தவறு. இப்போது, நான் வேதவசனத்தில் நிலைத்திருக்க விரும்புகிறேன். வேதவசனத் தின்படி இல்லாத எதனுடனும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இருக்க வேண்டாம். இப்போது, ஒரு தரிசனம் என்றால் என்ன என்பதை நான் விளக்க முயற்சிக்கும்போது, இதை ஒரு நிமிடம் எடுத்துக்கொள்வோம். நீங்கள் அனைவரும் விரும்பினால், எனக்கு அந்த ஒரு நிமிடம் நேரம் கொடுப்பீர்களா? ஆம் ஐயா, நன்றி. 14 இது போதகர்களுக்கானது. பாருங்கள், அவர்கள் இங்கே ஒரு-ஒரு மாநாட்டை நடத்துகிறார்கள், பகல் நேரத்தில் அந்த மாநாட்டிற்குச் சென்று அந்த மனிதர்களுடன் பேச முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நான் விரும்பினேன். நான் அதை உண்மையில் மிகவும் ரசித்திருப்பேன். நான் அறியாத பல காரியங்களை அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டிருக்க முடியும். நிச்சயமாக என்னால் முடியும். ஆனால் இவ்வாறான கூட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதால் என்னால் அதைச் செய்ய முடியாது. இப்போது, ஒரு தரிசனம் என்பது ஒரு... நான் உங்களுக்கு ஒரு சிறிய உவமையைக் கூறப்போகிறேன். நான் உங்களை நன்றாகப் பார்ப்பதற்கு வசதியாக இங்கே நில்லுங்கள். இப்போது இதை இப்படி எடுத்துக்கொள்வோம், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு குழந்தைத்தனமான வடிவத்தில். 15 இப்போது, நாம் அனைவரும் சிறு பிள்ளைகள், மேலும் நாம்... கண்காட்சியோ அல்லது சர்க்கஸோ ஊருக்கு வரும்போது, அங்கு செல்வதற்கு நம்மிடம் ஒரு பைசாக் கூட இல்லாதிருந்த காலங்கள் உங்களுக்கு நினைவி ருக்கிறதா? நிச்சயமாக நமக்கு நினைவிருக்கிறது. மேலும் இப்போது, "வரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளே." நாம் அனைவரும் ஒரு பெரிய வேலியின் அருகே நின்றுகொண்டிருக்கிறோம்; அது ஒரு மிகப் பெரிய வேலி. இந்த வேலிக்கு உள்ளே ஒரு பெரிய கண்காட்சி அல்லது சர்க்கஸ் நடந்துகொண்டிருக்கிறது, எல்லா வகையான விலங்குகளும் மற்றும் எல்லாமும் உள்ளன. சிறுவர் சிறுமிகளாகிய நாம் அனைவரும் அங்கே சுற்றி நின்றுகொண்டிருக்கிறோம். அதில்-உள்ளே என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். சரி, நான் உங்களுடைய உயரமான சகோதரனாக இருக்கிறேன். இப்போது, அங்கே-அது என்னை அதிகப்படியான ஒரு சகோதரனாக் கிவிடாது. எனக்கு அருகில் ஒருவேளை மற்றொரு சகோதரன் இருக்கலாம், அவன் குட்டையானவனாகவும், திடமானவனாகவும், வலிமையானவனாகவும் இருக்கலாம். ஒரு வேளை ஏதேனும் சுமை தூக்க வேண்டி யிருந்தால், அவனால் அதைத் தூக்க முடியும். ஆனால் எனக்கு இருப்பது... தேவன் என் சகோதரனை விட என்னை உயரமாகப் படைத்துள்ளார். 16 இப்போது, முதலில் உங்களுக்குத் தெரியும், அங்கே மேலே, கிட்டத்தட்ட உச்சிக்கு அருகில், அந்த வேலியில் ஒரு-ஒரு சிறிய துளை இருக்கிறது, அதன் வழியாக நீங்கள் உள்ளே பார்க்க முடியும். ஆனால் குட்டையான என் சிறிய சகோதரனால் அவ்வளவு உயரத்திற்கு எட்ட முடியாது, ஆனால் என்னால் முடியும். இப்போது, தேவன் என்னை உயரமாகப் படைத்தார். இப்போது, நான் உயரமாக இருக்க விரும்பியதால் நான் உயரமாகவில்லை. நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா? நான் உயரமாக இருப்பதற்கென்றே பிறந்ததால் நான் உயரமாக இருக்கிறேன். நீங்கள் ஒரு பிரசங்கியாராக இருப்பதற் கென்றே பிறந்ததால், நீங்கள் ஒரு பிரசங்கி யாராக இருக்கிறீர்கள். "தேவன் சபையிலே-தேவன் சபையிலே சிலரை முதலாவது அப்போஸ்தலர்களாக வைத்தார்..." ஒரு அப் போஸ்தலர்-அவர்கள் ஏன் தங்களை அப் போஸ்தலர் என்று அழைக்கப்பட விரும்பு கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போஸ்தலர் என்பது ஒரு மிஷனரி, மிஷனரி என்ற அதே வார்த்தைதான், இரண்டும் ஒன்றுதான். "மேலும் முதலாவது, மிஷனரிகள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள், போதகர்கள்... என தேவன் வைத்தார்." தேவன் அந்தக் காரியங்களை முன்குறித்தார், தேவனுடைய முன்னறிவினால் அவை சபையிலே வைக்கப் பட்டன. பின்னர்... மோசே மோசேயாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. எரேமியாவைப் பொறுத்த வரை, அவர் தன் தாயின் வயிற்றில் உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே தேவன் அவரை அழைத்து, "நான் உன்னை அறிந்தேன், உன்னைப் பரிசுத்தம் பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளை யிட்டேன்" என்று கூறினார். இதில் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை. தேவனே அதைச் செய்கிறார். "தேவன் வைத்தார்..." 17 சரி இப்போது, அந்தச் சிறிய பெஞ்சில் நாம் அனைவரும் நிற்கிறோம். நான் என் சகோதரனை விடச் சற்று உயரமாக இருக்கிறேன். இப்போது, என்னால் தூக்க முடியாத சுமையை அவனால் தூக்க முடியும், ஆனால் அவனால் பார்க்க முடிவதை விடச் சற்று உயரத்தில் உள்ளதை என்னால் பார்க்க முடியும். பார்க்கிறீர்களா? ஒருவேளை அது சகோதரர் ஜோசப்பாகவும் நானாகவும் இருக்கலாம். நான் பிரசங்கிக்க முடியாத அளவுக்கு அவர்-அவர் பிரசங்கிக்க முடியும். மேலும் அவர் ஒருபோதும் காண முடியாத தரிசனத்தை ஒருவேளை நான் காண முடியும். அவரைப்போல என்னால் பிரசங்கிக்க முடியாது. மேலும் தேவன் நம் எல்லோரையும் அப்படித் தான் உருவாக்கியிருக்கிறார், வீட்டில் உள்ள தளவாடங்களைப் போல. ஒன்று, இந்த இரவில்-இந்த அறையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சத்தங்கள் வருவதை நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும், அதை உங்களால் பார்க்க முடியாது. நீங்கள் அதை நம்பவில்லை என்றால், எங்காவது ஒரு வானொலியை இயக்கிப் பாருங்கள், அது இல்லையா என்று பாருங்கள். நீங்கள் அதைப் பார்க்கவில்லை; அதை அறிவிக்க உங்கள் புலன்களுக்கு எந்த வழியும் இல்லை, ஆனால் அது அங்கே இருக்கிறது. ஒருவேளை ஒரு துண்டு உலோகம்... இதோ ஒரு டேப் ரெக்கார்டர் இருக்கிறது, அந்தச் சத்தத்தைப் பதிவுசெய்கிறது, ஆனால் ஏதாவது ஒரு ஸ்படிகம் போன்ற ஒன்று அதற்கேற்ப நேர் மறையாகச் செயல்படும் வரை, அந்த டேப் ரெக்கார்டரால் அந்தச் சத்தத்தைப் பிடிக்க முடியாது. அது சரிதானே? 18 சரி, இந்த அறையின் வழியே வரும் படங்களும், நேரலைப் படங்களும் உள்ளன. அது உங்களுக்குத் தெரியுமா? தொலைக் காட்சியைப் போட்டுப் பாருங்கள். இப்போது, வீட்டில் உள்ள எல்லாப் பொருட்களும், சில தொலைக்காட்சியாகவும், சில வானொலி யாகவும், சில குளிர்சாதனப் பெட்டியாகவும், சில-செஸ்டர்ஃபீல்ட் சோபாவாகவும், மற்றும் சில-ஓ, எல்லாப் பொருட்களும் வீட்டில் இருந்தால் என்னவாகும். சரி, பின் ஒன்று, வானொலியால் சத்தத்தைப் பிடிக்க முடியும், ஆனால் அதைப் படமாகப் பிடிக்க முடியாது. தொலைக்காட்சியால் படத்தைப் பிடிக்க முடியும், ஆனால் அதனால் குளிர்சாதனப் பெட்டியாக இருக்க முடியாது. பார்க்கிறீர்களா? நாம் அனைவரும் வித்தியாசமான பகுதிகளைக் கொண்டிருக்கிறோம். தேவன் வீட்டில் தளவாடங்களை வைத்திருக்கிறார். இப்போது, தொலைக்காட்சி சொல்வதைக் கவனியுங்கள், "என்னால் குளிர்சாதனப் பெட்டியாக இருக்க முடியாவிட்டால், நான் இனி தொலைக்காட்சியாக இருக்கமாட்டேன்." பார்க்கிறீர்களா? தொலைக்காட்சி வீணாகி விட்டது. ஆனால் நாம் அனைவரும் தேவனில் நமது அழைப்பைக் கண்டறிந்து, அதிலேயே நிலைத்திருந்தால். பார்க்கிறீர்களா? எப்போது நம்மைப் பயன்படுத்த வேண்டும், எப்படி நம்மைப் பயன்படுத்த வேண்டும் என்று தேவனுக்கு மட்டுமே தெரியும். மேலும்-மேலும் நாம் இங்கும் அங்கும் தாவிக் குதிக்க விரும்பவில்லை. தேவன் உங்களை வைத்த இடத்திலேயே இருங்கள். உண்மையா னவர்களாக இருங்கள். தேவன் உங்களை எப்படி இருக்க விரும்புகிறாரோ அப்படியே இருங்கள். 19 இப்போது, இந்த விஷயத்தில், சகோதரரே-என் பின்னால் நிற்கும் சகோதர சகோதரிகள், "இப்போது, நீங்கள் எட்டிப்பார்த்து உங்களால் என்ன பார்க்க முடிகிறது என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள். சரி, நான் என் பெரிய, நீளமான, மெலிந்த கைகளை மேலே நீட்டி, எனது-அந்தப் பலகைகளைப் பிடித்துக்கொண்டு, என் கால்விரல்களை ஊன்றி மிகவும் கடினமாக மேலே இழுத்து, பார்த்துவிட்டு, "ஆஹா," என்று சொல்கிறேன். நான் கீழே வருகிறேன், ஆமாம், மிகவும் கடினமான வேலை." நீங்கள் என்ன பார்த்தீர்கள்?" "ஒரு யானை." அப்படியா?" "ஆமாம்." "வேறென்ன பார்த்தீர்கள்?" "சரி, எனக்குத் தெரியவில்லை, நான் முயற்சிக்கிறேன்." நான் மறுபடியும் மேலே செல்கிறேன்-வெகு உயரத்தில் சென்று மீண்டும் அதைப் பிடித்துக்கொண்டு, என் முழு பலத்தோடும் நான் இழுத்து, பார்க்கிறேன், "ஆஹா." நான் கீழே வரும்போது... "நீங்கள் என்ன பார்த்தீர்கள்?" "ஒரு ஒட்டகச்சிவிங்கி." 20 இப்போது, மேடையில் தோன்றும் இந்தத் தரிசனங்கள் அதுபோலத்தான் இருக்கின்றன. பார்க்கிறீர்களா? அது ஒரு தரிசனத்தைப் பார்ப்பது. இப்போது, அது தேவனுடைய ஒரு வரமாகும். இப்போது போதகர்களே, இதைப் புரிந்துகொள்ளுங்கள். இது தேவனுடைய ஒரு வரம். இப்போது, இயேசு இந்த பூமியில் இருந்தபோது, தேவன் பூமிக்கு அளித்த மிகப் பெரிய வரமாக அவர் இருந்தார், ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தைத் தம்மோடே ஒப்புரவாக்கினார். "தேவனுடைய பரிபூரணமெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்தது. அவர் அளவின்றி ஆவியைப் பெற்றிருந்தார்." வேதாகமம் அதைச் சொல்கிறது. இப்போது, அவருக்குள் இருந்தது, எதோடு ஒப்பிடுவது என்றால், கடலில் உள்ள அனைத்துத் தண்ணீருக்கும் ஒப்பாக நான் சொல்வேன். அதுவே இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த தேவனுடைய வரமாகும். இப்போது, இங்குள்ள இந்த அற்பமான ஊழியனுக்குள் இருக்கும் இந்தச் சிறிய வரம், அந்தப் பெருங்கடலிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கரண்டித் தண்ணீரைப் போன்றது மட்டுமே. இப்போது, அந்தப் பெருங்கடலுக்கு முன்னால் அந்த ஒரு கரண்டித் தண்ணீர் எவ்வளவு என்பதை நீங்கள் அறிவீர்கள், ஒன்றுமேயில்லை. ஆனால் நினைவில் கொள்ளுங்கள், அந்தக் கரண்டியில் உள்ள அதே வேதியியல் கூறுகள்தான் முழுப் பெருங்கடலிலும் உள்ளன, ஆனால் அந்த அளவுக்கு அதிகமாக இல்லை. பார்க்கிறீர்களா? இப்போது, தேவன் அந்த வரத்தை எனக்கு அளவாகக் கொடுத்துள்ளார். அவர் அதை உங்களுக்கும் அளவாகக் கொடுக்கிறார். பிரசங்கிப்பதற்காக அவர் இந்த மனிதனுக்கும் அதை அளவாகக் கொடுக்கிறார். பாடுவதற்காக அவர் இந்த மனிதனுக்கும் அதை அளவாகக் கொடுக்கிறார். ஆனால் அவர் இயேசுவுக்கு அதை அளவின்றிக் கொடுத்தார். அது-தேவனின் முழுமையும் அவருக்குள் இருந்தது; அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக இருந்தார். 21 இப்போது, ஆனால் அவர் எப்படி இருந்தாரோ அதேபோல நாமும் தேவனுடைய குமாரர்களாக இருக்கிறோம், ஆனால் அவருடைய கிருபையினால் தேவனுடைய தத்தெடுக்கப்பட்ட குமாரர்களாக இருக்கிறோம். தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மரணத்தின் மூலமாக, அது நம்மை தேவனோடுள்ள உறவுக்குள் கொண்டுவருகிறது. இப்போது அப்படியானால், தேவன் தம்முடைய தத்தெடுக்கப்பட்ட குமாரர்களுடன், சபையிலே சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரை போதகர்களாகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகர்களாகவும், மற்றும் பலராகவும், இப்படி கீழே வரிசையாக ஏற்படுத்தியிருக்கிறார். இப்போது, அவைகள் வெறும் சிறிய வரங்கள் மட்டுமே. இப்போது, அத்தனை வல்லமையுடன் இயேசு பெலவீனமடைந்தாரா இல்லையா என்பதை நாம் எடுத்துக்கொள்வோம். ஒரு நாள் அவர் போய்க்கொண்டிருந்தார், அப்போது ஒரு பெண் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். மேலும் அவள்-அதுதான் அவளுடைய தொடர்புப் புள்ளியாக இருந்தது. அவள் அவரை முழு இருதயத்தோடும் விசுவாசித்தாள். பிறகு அவள் பார்வையாளர் கூட்டத்திற்குள், எங்கேயோ ஓடிவிட்டாள். இயேசு திரும்பிப் பார்த்து, "இப்போது, என்னைத் தொட்டது யார்?" என்று கேட்டார். அதற்கு அப்போஸ்தலர்கள், "ஏன், ஆண்டவரே, உம்மை யார் தொட்டது என்று கேட்கிறீர்," அதாவது, "எல்லோரும் உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே. 'யாரோ உம்மைத் தொட்டார்கள்' என்று ஏன் சொல்கிறீர்?" என்றார்கள். அவர், "ஆனால் என்னிலிருந்து வல்லமை புறப்பட்டுப் போனதை நான் அறிகிறேன்," என்றார். அது உண்மையா? 22 "வல்லமை" என்றால் என்ன அர்த்தம்? "பெலன்." அது சரிதானே? "நான் பெலவீன மடைந்தேன்" என்று வேறு வார்த்தைகளில் சொல்லலாம். "யாரோ என்னைத் தொட்டார்கள்; நான் பெலவீனமடைந்தேன்." இப்போது, அந்தப் பெண் என்ன செய்தாள்? அந்தப் பெண், தேவனுடைய வரமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள தனது விசுவாசத் தினாலே, அவரிடமிருந்து தனது விசுவாசத் திற்கான பலன்களைப் பெற்றுக்கொண்டாள். இது தெளிவாக இருக்கிறதா? அவளுடைய விசுவாசம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த தேவனுடைய வரத்தை செயல்படச் செய்தது. இயேசுவுக்கு அந்தப் பெண்ணைத் தெரியாது. தம்மைத் தொட்டது யார் என்று அவருக்குத் தெரியாது, தெரிந்திருந்தால், "என்னைத் தொட்டது நீதான்" என்று அவர் சொல்லியிருப்பார். அவருக்கு அது தெரியாது. அவர் சொன்னார், "பிதா முதலாவது எனக்குக் காண்பிக்கிறாரேயொழிய, நானாக எதையும் அறியேன், எதையும் செய்யேன், பின்பு அதை நான் செய்யப்போகிறேன்." மேலும் இந்தப் பெண் அவரைத் தொட்டு, இயேசுவிடமிருந்து தன் இருதயத்தின் வாஞ்சையையே பெற்றுக் கொண்டாள், ஏனென்றால் அவர் இம்மானுவேல் என்று அவள் விசுவாசித்தாள். அதைப் பாருங்கள், அவளுடைய விசுவாசம்... 23 பின்பு அவர் திரும்பிப் பார்த்தார், அவர் சொன்னார்...அவர் பார்த்தார். அந்த வல்லமை புறப்பட்டுப் போனபோது, அது எங்கிருந்து அசைகிறது என்பதை அவர் கண்டார், எங்கே அந்த...?...இன்றிரவு இங்கே இருப்பதை விட அநேகமாக இன்னும் அநேக மக்கள் அங்கே வந்திருந்தார்கள். அவர் பார்வையாளர் கூட்டத் தில் வெகு பின்னால் பார்த்தார், அவளைப் பார்த்து, "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். அந்த பெரும்பாடு நின்றிருந்தது. பார்த்தீர்களா? இப்போது, அவள் தேவனி டமிருந்து தான் விரும்பியதை இயேசுவி டமிருந்து இழுத்துக்கொண்டாள். ஏனென்றால் தேவன்-இயேசு தேவனுடைய பிரதிநிதியாக இருந்தார், தேவன் இங்கு பூமியில் வாழ்ந்த சரீரமாக இருந்தார். இப்போது, அதற்கு-இப்போது, அப்போதுதான் ஒரு நபர் தேவனுடைய வரத்தை செயல்படச் செய்தார். இப்போது, கேளுங்கள், உங்களுக்காக இருக்க வேண்டியது நான் அல்ல. இப்போது, நான் இன்னும் ஓரிரு இரவுகளில் இந்தக் கூட்டங்களை முடிக்கப் போகிறேன், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்கப் போகிறேன். அது ஒருபோதும் எனக்குச் செய்யாது-நான் ஒருபோதும் இருந்ததில்லை-அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதே காரியத்தைச் சொல்வது தேவனிடத்தில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசமே. அது-அது தேவனுடைய வரம். நான் தேவனுடைய வரம் அல்ல: நீங்கள் படங்களில் பார்க்கும் அந்த வெளிச்சம் ஒரு-ஒரு தூதன். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞான உலகம், இப்போது ஜெர்மனி, அமெரிக்கா, மற்றும் எல்லா இடங்களிலும், அதன் புகைப்படத்தை எடுத்தது. அதுதான் தேவனுடைய வரம். 24 அந்த வரம் இறையாண்மையுடன் எனக்கு அருளப்பட்ட அதே நேரத்தில்தான் நான் பிறந்தேன். ஆனால் நீங்கள் அதை விசுவாசித்தால் ஒழிய, அந்த வரத்தைக் கொண்டு என்னால் ஒரு காரியமும் செய்ய முடியாது. இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்வதில் நீங்கள் வைக்கும் விசுவாசமே, இயேசு கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்காகச் செய்தவற்றின் பலன்களைப் பெற்றுத்தருகிறது. அதை நீங்கள் காண்கிறீர்களா? இப்போது, அதுதான் என்னை மேடையில் பெலவீனமாக்குகிறது. அதனால்தான்-என்னை நீங்கள் வெளியே தூக்கிச் செல்ல வேண்டியிருப்பதற்குக் காரணம் அதுதான். இப்போது இதை நீங்கள் வேதப்பூர்வமாகக் காண்கிறீர்களா? பாருங்கள், தேவனுடைய வரத்தைப் பயன்படுத்துவது நீங்கள்தான், நான் அல்ல, அது நீங்கள்தான். இப்போது, நீங்கள் ஒவ்வொருவரும் என்னைப் பார்த்து, "நான் விசுவாசிக்கவில்லை; அவர் ஒரு மாயக்காரன், இதில் நான் எதையும் விசுவாசிக்கவில்லை" என்று கூறி அடைத்துப்போட்டால், இங்கே ஒரு காரியமும் செய்யப்பட முடியாது. அதுவே சரி. 25 இயேசு, ஒரு பட்டணத்திற்குச் சென்றார் மற்றும்-அவர் எங்கே பிறந்தாரோ அங்கே, அவர் சொன்னார், "அநேகத்தகுதியான அற்புதங் களை அவர் செய்யவில்லை-அவர்களுடைய எதைக் குறித்து அவரால் செய்ய முடிய வில்லை?" [சபையார் சொல்கிறார்கள் "அவிசு வாசம்"] சரிதான். அவர்கள் அதை விசுவாசிக்க வேண்டியிருந்தது. அணுகுமுறையைக் கவனி யுங்கள், யாரையும் கவனியுங்கள். அந்தப் பெண்ணைப் பாருங்கள், அவள் எப்படி அவருடைய வஸ்திரங்களைத் தொட்டு, சுகமானாள் என்று. ஆனால் அந்த ரோமப் போர்ட்சேவகனைப் பாருங்கள், அவன் அவருடைய முகத்தைச் சுற்றி ஒரு துணியைக் கட்டி, அவரைத் தலையில் அடித்து, "இப்போது, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், தரிசனங்களைக் கண்டால், உன்னை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்" என்றான். அவனுக்கு எந்த வல்லமையும் உணரப் படவில்லை, ஏனென்றால் முதலாவதாக அவன் அதை விசுவாசிக்கவில்லை. ஆனால் அந்தப் பெண் வல்லமையை உணர்ந்தாள், அல்லது வல்லமை தன்னை விட்டுப் போவதை அவர் உணர்ந்தார், ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு விசுவாசம் இருந்தது. அவள் எதற்காக வந்தாளோ அதைப் பெற்றுக்கொண்டாள், ஏனென்றால் அவள் அதைச் சரியாக அணுகினாள். அதனால்தான் சூனேமியாள் ஸ்திரீ, தேவனுடைய பிரதிநிதியாக இருந்த எலியாவுக்கு முன்பாக, அவள் கேட்டதைப் பெற்றுக்கொண்டாள், ஏனென்றால் அவள் தேவனுடைய வரத்தை பயபக்தியுடன் அணுகினாள். அதனால்தான் லாசரு மரித்திருந்த போது மார்த்தாள் தான் கேட்டதைப் பெற்றுக் கொண்டாள், ஏனென்றால் அவள் தேவனுடைய வரத்தை பயபக்தியுடன் அணுகினாள். பார்த்தீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்க வேண்டும். விசுவாசம் இல்லாமல்... 26 இப்போது, அது நான் அல்ல. நீங்கள் சொல்வீர்கள், "சகோதரர் பிரன்ஹாம், எனக்கு என்ன பிரச்சனை என்று உங்களால் சொல்ல முடியுமா?" இல்லை, ஐயா, என்னால் முடியாது. அதுதான் சரி. ஆனால்-உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் அதை விசுவாசித்தால், இப்போது, கற்பனை செய்யாமல், உங்கள் இருதயத்தோடு விசுவாசித்தால், தேவன் அதைக் குறித்து உங்களுக்குச் சொல்வார். ஆனால் இப்போது, நான் என்ன சொல்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் பேசுவது எனக்கே கேட்கிறது, ஆனால் நான் வேறொரு உலகத்தில் இருக்கிறேன்-வேறொரு...இது ஒரு-இது ஒரு ஆறாவது அறிவு, அல்லது நான்காவது பரிமாணம், இது-அல்லது அது எதுவாக இருந்தாலும் சரி. இந்தப் புகைப்படங்களும் காரியங்களும்...?...இப்போது இருக்கும் பரிமாணத்தில் அது இருக்கிறது. விவாதத்திற்காக நாம் அதை அப்படியே எடுத்துக்கொள்வோம். அல்லது இங்கே ஊடுருவி வரும் சத்தங்கள், இப்போது பாடிக் கொண்டிருக்கும் டேப் செய்யப்பட்ட பாடகர்கள் கூட; மக்கள் அலறுகிறார்கள்; எல்லா விதமான காரியங்களும் நடந்துகொண்டிருக்கின்றன, காற்று அலைகள் இங்கே ஊடுருவிச் செல்கின்றன, ஆனால் உங்களால் அதைப் பிடிக்க முடியாது. ஒரு வானொலியால் முடியும். இந்தப் படங்கள் இங்கே ஊடுருவி வருகின்றன; உங்களால் அதைக் காண முடியாது. நீங்கள்...?...என்பதற்கு எந்த வழியும் இல்லை, ஆனால் தொலைக் காட்சி அவைகளைக் காண்பிக்கும். 27 இப்போது, நீங்கள் காண்கிறீர்கள், சில தொலைக்காட்சிக்காக அமைக்கப்பட்டிருக் கின்றன, சில குரலுக்காக அமைக்கப் பட்டிருக்கின்றன, சில ஏதோ ஒன்றுக்காக, மற்றும் வேறு எதற்காகவோ அமைக்கப் பட்டிருக்கின்றன, அவர்களால் அதை ஒன்றும் செய்ய முடியாது. அது ஏதோ ஒன்று... இப்போது, தொலைக்காட்சிப் பெட்டி ஒரு-தொலைக்காட்சி ஒரு-ஒரு ஊமை, வானொ லியும் அப்படியே, அது செயல்படுவதற்கு ஏதோ ஒன்று இல்லையென்றால், அது ஒரு செவிடான மற்றும் பேச முடியாத ஊமை. ஒரு அலைவரிசையை அனுப்ப ஒரு ஒலிபரப்பு நிலையம் இருக்க வேண்டும், இல்லை யென்றால் உங்களிடம் எவ்வளவு பெரிய வானொலி இருந்தாலும், அது ஒருபோதும் சத்தம் போடாது. அது சரியா? அது முற்றிலும் ஒரு ஊமை. எனக்கும் தரிசனங்களை பொறுத்த வரை அப்படியே, பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வல்லமையை அனுப்பி, இந்த நாட்களில் இயேசு தாம் செய்வதாகச் சொன்னதைச் சரியாகச் செய்வதற்கு இங்கே இல்லையென்றால், நான் முற்றிலும் ஒரு ஊமை. பார்த்தீர்களா? இப்போது-இப்போது, இது தேவனுடைய வரம். இப்போது, அதுதான் என்னை பெலவீனமாக்குகிறது. 28 இப்போது, உதாரணமாக, நானும் இந்தச் சிறுவர் சிறுமிகளும்-சில நிமிடங்கள் வேலிக்கு அங்கே பின்னால் நிற்கிறோம். நாம் மீண்டும் வேலிக்கு அங்கே பின்னால் இருக்கிறோம். இப்போது, நீங்கள் தேவனுடைய வரத்தைப் பயன்படுத்தும்போது அப்படித்தான் நடக்கிறது. இப்போது, தேவன் தம்முடைய சொந்த வரத்தைப் பயன்படுத்த விரும்பினால் என்ன நடக்கும்? எனக்கு எந்த சிரமமும் இல்லை, நான் அதற்குக் கீழே வர வேண்டியதில்லை. நான் வீதியில் நடந்து சென்றுகொண்டிருப்பேன், அல்லது வீட்டில் உட்கார்ந்திருப்பேன், அல்லது-அல்லது வேறு எங்காவது இருப் பேன், தேவன் எனக்குத் தரிசனமாகி, அவர் எனக்குச் சொல்கிறார். அது என்னை பெலவீன மாக்குவதில்லை, அது என்னை மகிழ்ச்சி யாக்குகிறது. இப்போது, வேலியின் அருகே, ரிங் மாஸ்டர், அல்லது கண்காட்சியின் உரிமை யாளர், சர்க்கஸ் உரிமையாளர், அங்கே வந்து, "முழுவதையும் பார்க்க விரும்புகிறீர்களா? நான் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்பு கிறேன்," என்கிறார். அவர் என் கழுத்தின் பின்பக்கமாகப் பிடித்து என்னைத் தூக்கி, "இங்கே பார்க்கிறாயா? இதுதான் இங்கே நடக்கப்போகிறது. இந்த ஒட்டகச்சிவிங்கி இங்கே வரப்போகிறது, இதைச் செய்யும், மேலும் இதை, இன்னின்னபடி, இதுதான் முழு கண்காட்சியாக இருக்கப்போகிறது," என்று சொல்கிறார். 29 இப்போது, இங்கே மேடையில், அந்த வரத்தை உள்ளே இழுப்பது வெறுமனே உங்களுடைய-உங்களுடைய விசுவாசம்தான். மேலும் அவர்...?...ஒருவேளை சில நேரங்களில், தரிசனம் வெளிப்படுகிறது, மேலும் என்ன வெல்லாம் நடக்கப்போகிறது என்பதைச் சொல்கிறது. ஆனால் இப்போது, தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுக்கும்போது, அது அப்படியே தூக்குகிறது. அது எப்போது நடக்கும் என்று எனக்குத் தெரியாது. மேலும் அவர் எனக்குக் காண்பிக்கிறார், "இப்போது, நீ ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்; நீ அங்கே நில். அது ஒரு குறிப்பிட்ட நேரமாக இருக்கும்." நான் அந்தப் பட்டணத்தில் இருக்கலாம், ஐம்பது-நூறு-இரண்டு-அல்லது இரண்டா யிரம் மைல்கள் தள்ளியிருக்கலாம், அது சரியாக இப்படித்தான் நடக்கும். 30 இங்கே பின்லாந்திலும், மற்றும் அங்கே சுவிட்சர்லாந்திலும் நான் எழுப்பிய அந்தச் சிறுவனப் போல. நீங்கள் காணும் இந்தக் காரியங்கள் அனைத்தும், மாதக்கணக்கில், மற்றும் சில நேரங்களில் வருடக்கணக்கிற்கு முன்பாகவே சொல்லப்படுகின்றன. நான் எங்கே நிற்பேன், எங்கே இருக்க வேண்டும் என்பதை அவர் எனக்குச் சரியாகச் சொல்வார், எல்லா வற்றையும் எனக்குச் சொல்வார். அதிலிருந்து நான் திரும்பி வரும்போது, என்னால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேவன் தம்முடைய வரத்தைப் பயன்படுத்துவது அப்படித்தான் இருக்கிறது. தேவன் நம்மோடு பேச விரும்பும் போதெல்லாம் தம்முடைய வரத்தைத் தாமே பயன்படுத்துகிறார், மேலும் நீங்கள் அதைப் பயன்படுத்த விசுவாசம் கொண்டிருப்பதற்கு ஏற்ப, அதை மக்கள் பயன்படுத்தும்படி அதை அவர்களிடம் ஒப்படைக்கிறார். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக-மேலும் உங்களை... 31 இப்போது, அது-அது வேதப் பூர்வமானதா? அது சரியாக பைபிள் சொல்லும் காரியம்தான். எனவே சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அது மனோவசியம் என்று கூறி எந்த முடிவுகளுக்கும் வர ஒன்றுமில்லை. தேவன் வைத்திருக்கும் ஒவ்வொரு உண்மையான காரியத்திற்கும் பிசாசு ஒரு போலியைக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிவோம்-நாம் அறிவோம். அது சரிதான். அவர்கள் எப்போதும் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம், யந்நே மற்றும் யம்பிரே இருந்தார்கள், ஆனால்-அவர்களிடம் மோசே மற்றும் ஆரோன் இருந்தார்கள். அது சரிதான். அவர்களிடம் மாயவித்தைக்காரனாகிய சீமோன் இருந்தான். அவர்களிடம் சுகமளிக்கும் ஊழியத்தைச் செய்த பிலிப்பு இருந்தான். பார்த்தீர்களா? அவர்களுக்கு எப்போதும் சாதகமும் பாதகமும் இருந்திருக்கிறது. இயேசு வரும் வரை அவர்கள் எப்போதும் கொண்டிருப்பார்கள், அதன்பிறகு எதிர் மறையான அனைத்தும் எடுத்துப்போடப்படும். நடனம், அது முதலில் பைபிளில்தான் உருவானது. பிசாசு அதைப் பிடித்துக்கொண்டு, மனிதர்களின்-குடும்பங்களின் பிரிவினைக்குக் காரணமானான். நிச்சயமாக, நீங்கள் காணும் அனைத்துக் காரியங்களும், பாடல், முதலில் தேவனுடைய துதிகளில்தான் உருவானது. இப்போது, வெளியே பாருங்கள் அத்தனை பழைய, அசுத்தமான, அவதூறான, பூகி-வூகி அல்லது அது போன்ற எந்த முட்டாள்தனமான காரியத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையில் இது போன்ற ஒன்றை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு கிறிஸ்தவ ஆவியினால் அப்படிப்பட்ட காரியங்களைக் கேட்டுக்கொண்டு சரியாக இருக்க முடியாது. பார்த்தீர்களா? 32 ஆனால் அது என்ன நன்மையைச் செய்கிறது? பிசாசு பாடுகிறான், நிச்சயமாக. ஆனால் அது என்னவென்று பாருங்கள், அது எதை அறிவிக்கிறது என்று பாருங்கள், தீமையை. மேலும் குறிசொல்லுபவர், மேலும் எல்லாமே உங்களிடம் டாலர்களை வசூலிக்கிறது, மேலும் கொஞ்சம் காரியங்களைச் செய்ய உங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு செல்கிறது, மேலும் அதில் பாதி சரி, மற்றொன்றில் பாதி இல்லை, மற்றும் அது போன்ற எல்லாமே, மேலும் கிறிஸ்துவை அறிவிப்பதில்லை, மேலும் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசுவதில்லை, பாவிகளை மனந்திரும்புதலுக்கு அழைப்பதில்லை. ஏதோவொரு மரித்த நபரைப் பற்றிய கொஞ்சம் முட்டாள்தனமான காரியங்களைத் தவிர அதில் வேறொன்றுமில்லை, மேலும் அவர்கள் நிச்சயமாக, கீழே அடியில் இருக்கும் மரித்தவர்களுக்காக, சிறையிலிருக்கும் ஆத்துமாக் களுக்காக, மனந்திரும்பாதவர்களுக்காக, மற்றும் அங்கே கீழே இழந்துபோன அனைவருக்காகவும் பரிந்துபேசுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன உங்களுடைய-ஏதோவொரு முதியவரைப் பற்றி உங்களுக்குச் சொல்வார்கள். அந்த சூனியக்காரி அதற்குக் கீழே அமர்ந்திருக்கிறாள்; அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்; அவளால் பேச முடிந்தது அவ்வளவுதான். நடுத்தரவாதிகள் (medium) அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் தேவனுடைய ஆவியானவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும், தெய்வீக சுகமளித்தலைப் பற்றியும், மதிப்புமிக்க காரியங்களைப் பற்றியும் பேசுகிறார். எனவே, என் சகோதரனே, மூடநம்பிக்கையாக-என் சகோதரனே, மூடநம்பிக்கையுடையவர்களாக இருக்காதீர்கள். மனிதர்களாக இருங்கள், உங்களைக் கிறிஸ்தவர்களாக நடத்திக் கொள்ளுங்கள். 33 இங்கே சில காலத்திற்கு முன்பு, என்னுடைய சிறிய செய்தியை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக நான் இதைச் சொல்வேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்தின் முற்பகுதியில், எப்போது-போயர் போருக்கு முன்பாக, டச்சுக்காரர்கள் அடிமைகளை இங்கு கொண்டு வந்தார்கள், அல்லது ஆப்பிரிக்க மக்களை, நீக்ரோக்களை, அடிமைகளாக இங்கே தெற்கே விற்றார்கள். மேலும் அந்த ஏழை நீக்ரோ அவனுடைய தாய்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு, அங்கே அடிமைத்தனத்தில் தள்ளப்பட்டபோது, ஏன், ஓ, என்னே. அவன் இனி ஒருபோதும் வீட்டிற்குத் திரும்ப மாட்டான். அவன் அந்தச் சிறிய பழைய மரக்கப்பலை கடற்பயணமாக செலுத்துவான். மேலும் ஓ, என்ன ஒரு பயங்கரமான காரியம், அவன் வெகு தொலைவில் இருந்தான், ஒரு அந்நியன். அவர்களை வேலை வாங்குவதற்காக மாட்டுச் சவுக்கடிகளாலும் மற்ற எல்லா வற்றாலும் அடித்தார்கள். அவனுக்குள் எந்த எழுச்சியும் இல்லை; அவன் வெறுமனே-அவன்-அவன் வீட்டு நினைவாகவே இருந்தான், அவனுக்குள்-அவனுக்குள் எந்த எழுச்சியும் இல்லை. 34 அங்கே கீழே ஒரு பெரிய தோட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்த இடத்தில் ஒருமுறை கேட்கப்பட்டது. அவர்கள் அனைவரும்-நீங்கள் அவர்களை அங்குமிங்கும் அடிக்க வேண்டியிருந்தது மற்றும் எல்லாமே. ஆனால் ஒரு இளைஞன் தன் தோள்களை நிமிர்த்தி வைத்திருந்தான்; அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கம்பீரமாக இருந்தான். மேலும் பையன், அவனுடைய முதலாளி எதையாவது சொன்னவுடனேயே, அவன் அதைச் செய்யத் தயாராகி, தன் வேலையை நன்றாகச் செய்தான். மேலும் ஒரு நாள் சில அடிமை வாங்குபவர்கள் வந்து, "உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்," என்றார்கள். "அந்த இளைஞனை அப்படிப்பட்டவனாக ஆக்குவது எது? மற்ற எல்லோரையும் விட அவனை முதலாளியாக்கி விட்டீர்களா?" என்று கேட்டார்கள். உரிமையாளர் சொன்னார், "இல்லை." கேட்டார்கள், "சரி, மற்ற எல்லோரையும் விட அவனுக்குச் சற்றே நன்றாக உணவு கொடுக்கிறீர்களா, அல்லது உறங்க நல்ல இடம் கொடுக்கிறீர்களா?" சொன்னார், "இல்லை." கேட்டார்கள், "அப்படியானால், அவனை இவ்வளவு கம்பீரமாக ஆக்குவது எது? மேலும் அவனை இவ்வளவு சுறுசுறுப்பாக ஆக்குவது எது? தன்னை அப்படி நடத்திக்கொள்ளச் செய்வது எது?" அவர் சொன்னார், "சரி, ஐயா, சமீபகாலம் வரை எனக்கே தெரியாது." சொன்னார், "அவன் எந்தக் கோத்திரத்திலிருந்து வந்தானோ, அவன் அந்த ராஜாவின் மகன் என்பதை நான் கண்டுகொண்டேன். அவன் ஒரு அந்நியனாக இருந்தாலும், அதை இன்னமும் உணர்ந் திருக்கிறான். மேலும் அவன் தன் சகோதரர்களுக்கு முன்பாகத் தன்னை வருங்கால இளம் ராஜாவாகவே நடத்திக்கொள்கிறான்." 35 தேவன் நமக்கு உதவுவாராக. நாம் காரியங்களைக் குறித்து தைரியத்துடனும், அறியாமையுடனும் இருக்க வேண்டாம். நாம் தேவனுடைய குமாரர்களாக நம்மை நடத்திக் கொள்வோம். தேவனுடைய ஒரு மகள், இங்கே வெளியே சென்று மதுபான விடுதிகளில் வாழாமல், தன் முகத்திற்கு வர்ணம் பூசாமல், தன் கூந்தலை வெட்டாமல், ஒரு வேசியைப் போல நடந்துகொள்ளாமல் இருக்க வேண்டும். உங்களை தேவனுடைய மகள்களாக நடத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ராஜாவுக்கு ஒரு மகள். அது சரிதான். தேவனுடைய குமாரர்கள் இங்கே வெளியே சென்று பைபிளை எடுத்துக்கொண்டு, "ஓ, அற்புதங்களின் நாட்கள் முடிந்துவிட்டன," என்றும், அது போன்ற எல்லா முட்டாள் தனமான காரியங்களையும் சொல்வதில்லை. தேவன் சொன்ன அனைத்திற்காகவும் அவர்கள் எழுந்து நிற்கிறார்கள். நாம் யாத்திரிகர்களாகவும், அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும் இருக்க லாம், ஆனால் நாம் ராஜாவின் குமாரர்களும் குமாரத்திகளுமாக இருக்கிறோம். உங்கள் தோள்களை உயர்த்தி நிமிருங்கள், ஆண்களும் பெண்களும் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழுங்கள். உண்மையான கிறிஸ்தவர்களைப் போல வாழுங்கள். ஆமென். [ஒலி நாடாவில் காலியிடம்] 36 ஏசாயா புத்தகத்தில், மேலும்-2-ம் அதிகாரத்தில், நாம் 18-ம் வசனத்தில் வாசிக்கிறோம், இங்கே ஒரு சிறிய பத்தி, இந்த 1-ம் வசனத்திலிருந்து ஒரு-ஒரு-சில வார்த்தைகள் மட்டும், ஒரு சிறிய உரையாக. மேலும் அடுத்த பதினைந்து நிமிடங்களில் வியாதியஸ்தர்களுக்காக நாம் ஜெபிக்கப் போகிறோம். வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் தமது வார்த்தைக்கு தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. எங்கள் பரலோகப் பிதாவே, உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது வார்த்தையே சத்தியம். மேலும் இப்போது, ஆண்டவரே, இன்றிரவு நாங்கள் புரிந்துகொள்ள வரும்போது எங்களுக்கு உதவி செய்யும். நீரே சிறந்த போதகர்; இப்போது, நாங்கள் புரிந்துகொள்ள உதவி செய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். 37 இப்போது, நாம் சில நிமிடங்கள் வார்த்தையைக் குறித்துப் பேசும்போது, கர்த்தர் இன்றிரவு உங்களை மிகவும் செழிப்பாக ஆசீர்வதிப்பாராக. "வழக்காடுவோம் வாருங்கள்." அது பைபிளிலுள்ள மிகவும் இனிமையான வசனங்களில் ஒன்று என்று நான் நினைக்கிறேன், நீங்கள் அப்படி நினைக்க வில்லையா? இப்போது, ஏசாயா, இந்த இளம் தீர்க்கதரிசி, அவனுடைய நாட்களில் சபை முழுவதுமாக தேவனை விட்டு விலகிச் சென்றிருந்தது, அவர்கள் அந்நிய பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். மேலும் எல்லாம் எப்படிப் போய்விட்டது என்று தேவன் அவனுக்குச் சொல்லியிருந்தார். அவன் ஒரு நாள் காலையில் தேவாலயத்தில் கீழே இருந்தான், ஒரு இளைஞனாக, அநேகமாக அவனுடைய நாற்பதுகளின் துவக்கத்தில் இருக்கலாம். ஏசாயாவின் தீர்க்கதரிசனம், அவன் இங்கே எழுதியது, அவன் ஒரு பெரிய தீர்க்கதரிசியாக இருந்தான், பைபிளிலுள்ள மாபெரும் தீர்க்கதரிசிகளில் ஒருவன். 38 பைபிளில் அறுபத்து ஆறு புத்தகங்கள் உள்ளன, ஏசாயாவில் அறுபத்து ஆறு அதிகாரங்கள் உள்ளன. ஏசாயா சந்ததியோடு தொடங்குகிறார், அதாவது-அது-அதாவது சிருஷ்டிப்பில். புத்தகத்தின் மையத்தில், அவர் பழைய ஏற்பாட்டை முடித்து, "வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம்," என்பதைக் கொண்டுவருகிறார், மேலும் ஆயிர வருட அரசாட்சியில் முடிகிறார், அங்கே அவர்கள்-வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் இருப்பதைப் போல-அறுபத்து ஆறாவது வசனம், அறுபத்து ஆறாவது அதிகாரம். அது தனக்குள்ளேயே ஒரு முழுமையான பைபிளாக இருக்கிறது. ஏசாயா கிருபையின் தீர்க்கதரிசி. இயேசுவின் இரத்தம் எப்படி இருக்கும் என்பதையும், நீதிபராகிய அந்த ஒருவரின் வருகை எப்படி இருக்கும் என்பதையும், மேலும் தேவன் தம்முடைய சபையை தமது இறையாண் மையுள்ள கிருபையினால் எப்படி சுத்திகரிப்பார் என்பதையும் உண்மையிலேயே எடுத்துக் காட்டியவர் அவர்தான். 39 ஒரு நாள் காலையில் தேவாலயத்தில் கீழே, ஓ, நான் அவர் இடத்தில் இருக்க விரும்பியிருப்பேன். அவர் ஒரு நாள் காலையில் ஜெபத்தில் கீழே இருந்தபோது, அவர் சுற்றிலும் பார்த்தார், தேவாலயத்தின் ஊடாகக் கேருபீன்கள் முன்னும் பின்னுமாகப் பறந்து செல்வதை அவர் கண்டார். அவைகளுக்கு ஆறு செட்டைகள் இருந்தன, இரண்டு அவைகளின் முகத்தை மூடியிருந்தன, இரண்டு அவைகளின் கால்களை மூடியிருந்தன, இரண்டினால் பறந்து, "பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்," என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தன. மேலும் ஏசாயா அண்ணாந்து பார்த்து, "ஐயோ! நான் அதமானேன், ஏனென்றால் தேவனுடைய மகிமையை நான் கண்டேன். மேலும் நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசம் பண்ணுகிறேன். மேலும் ஐயோ! நான் அதமானேன்," என்றான். 40 ஆனால் ஒரு தூதன் பலிகள் எரிந்து கொண்டிருந்த-பலிபீடத்தின் அருகே சென்று, குறட்டை எடுத்து, பலிபீடத்திலிருந்து ஒரு-ஒரு தழலை, நெருப்புத் தழலை, சூடான தழலை எடுத்து, வந்து அவனுடைய உதடுகளைத் தொட்டு, "இப்போது, நீ சுத்தமானாய், உன் பாவங்கள் நிவர்த்தியானது; இப்போது போய் தீர்க்கதரிசனம் சொல்," என்றான். ஓ, அவன் என்ன சொல்கிறான் என்பதை நான் கேட்க விரும்புகிறேன். மேலும் அவர் சொன்னார், "வழக்காடுவோம் வாருங்கள்." இப்போது, நாம் இருக்க விரும்புகிறோம்...இப்போது, நான் பிரசங்கிக்கப் போவதில்லை, உங்களிடம் சில நிமிடங்கள் பேசப்போகிறேன். மேலும் நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், அடுத்த சில இரவுகளுக்கான தொடர்ச்சியான தலைப்புகளை நான் எடுக்க விரும்புகிறேன், இப்போது, மீட்பைக் குறித்தும், மேலும் நாம் வியாதியிலிருந்து எங்கே மீட்கப்பட்டிருக்கிறோம் என்பதைக் குறித்தும், மேலும்-மேலும் கிறிஸ்துவின் இரத்தத்தினாலும். 41 இப்பொழுது, சிந்தித்துப் பாருங்கள், எல்லாவற்றிற்கும் காரணங்கள் இருக்கின்றன. நாம் ஒன்றாக இணைந்து சிந்திப்போம். "வாருங்கள், நாம் வழக்காடுவோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்." கர்த்தருடைய ஆலோச னையில் அமர்ந்து சிந்திக்க நீங்கள் விரும்ப மாட்டீர்களா? கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒருவர் என்னிடம், "சகோதரர் பிரன்ஹாம், நான் ஒரு தரிசனத்தைக் காண முடியுமானால் எதை வேண்டுமானாலும் கொடுப்பேன்," என்று கூறினார். நான் அவரை அணைத்துக்கொண்டேன், அவர் ஒரு உண்மையான சகோதரன்; நான் சொன்னேன், "எனக்கு அன்பான சகோதரனே, நீங்கள் வேதாகமத்தைத் திறக்கும் ஒவ்வொரு முறையும், தேவன் தம்மை வெளிப்படுத்துகிற ஒரு தரிசனத்தைக் காண்கிறீர்கள். இதோ தேவனுடைய தரிசனம்." அதைத் திறந்து-திறந்து, "தேவனே, இப்போது நான் உம்மைக் காணும்படி என் கண்களைத் திறந்தருளும்," என்று சொல்லுங்கள். வார்த்தையே தேவன். "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம் பண்ணினார்." இதோ தேவன் இருக்கிறார், நீங்கள் வேதாகமத்தைத் திறக்கும் ஒவ்வொரு முறையும், தேவன் உங்களிடம் பேசுவதான ஒரு தரிசனத்தைக் காண்கிறீர்கள். தாழ்மையான இருதயத்துடன் அமருங்கள். 42 நான் சில சமயங்களில் அதைப் படிக்கிறேன், எழுந்து, நாற்காலியைச் சுற்றி ஓடுகிறேன், என் சத்தத்தின் உச்சிவரை கத்துகிறேன், கொஞ்சம் அழுகிறேன், பின் அமர்ந்து இன்னும் கொஞ்சம் படிக்கிறேன், மறுபடியும் எழுந்து சுற்றி ஓடுகிறேன். வேலைக்காரியோ அல்லது வேறு யாராவதோ அந்த வழியாக வந்தால், அவர்கள் அந்த அறைக்குள் ஒரு பைத்தியக்காரன் அடைக்கப் பட்டிருப்பதாக நினைப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் நான்-உங்களுக்குத் தெரியும், நான் அதை விரும்புகிறேன். நான் இங்கே எப்படி நடந்து கொண்டாலும், நான்-நான்-நான் நன்றாய் உணர்கிறேன்; நான் வேறொரு தேசத்திற்குச் செல்கிறேன். காண்கி றீர்களா? அதைக் குறித்துக் கேட்பதை நான் விரும்புகிறேன். நீங்கள் வேதாகமத்திற்குள் பார்க்கும் எந்த நேரத்திலும் ஒரு தரிசனத்தைக் காண முடியும். இப்போது, தேவனுடைய வார்த்தையை வாசிக்கும் சிலர், தேவனுடைய வார்த்தையை மட்டுப்படுத்துகிறார்கள். சிலர் அதை கோட் பாடுகளுக்குள் மட்டுப்படுத்துகிறார்கள். ஓ, இதுதான் தேவனுடைய வார்த்தை சொல்கிறது, இது எங்கள் சபையில் நாங்கள் சொல்லும் எங்கள் கோட்பாடு. மற்றவர்கள், கல்வியைக் கொண்டு அதை மட்டுப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் போதகர்களை அனுப்பி, அவர்களுக்கு மிக உயர்ந்த கல்வியளிக்கிறார்கள், அதனால் அவர்கள் சரளமாகப் பேச முடியும், மேலும்-மேலும்-மேலும் அது-பயிற்சியளிக் கப்பட்ட இனிமையான குரலைக் கொண்டிருக்க முடியும், மேலும் அவர்கள் எப்படி தங்கள் "ஆ-மென்"-களை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும் என்பதையும் கற்பிக்கிறார்கள். மக்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள், அது எனக்கு ஒரு சாகும் கன்றுக்குட்டியின் சத்தத்தைப் போலக் கேட் கிறது. நான்-நான் அதை விரும்பவில்லை. நான்-நான் விரும்புகிறேன், "ஆமென்" என்று சொல்லியிருந்தால், "ஆமென்" என்று சொல் லுங்கள். அவ்வளவுதான். காண்கிறீர்களா? எனவே அவர்கள்... நான் அதை ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லவில்லை; நான்-நான் அதில் நம்பிக்கை வைக்கவில்லை. காண்கிறீர்களா? நான் அப்படி அர்த்தப் படுத்தவில்லை, நீங்கள் என்னை மன்னியுங்கள். மற்றும் நான்... 43 ஆனால் விஷயம் என்னவென்றால், மக்கள் தேவனை எப்படி மட்டுப்படுத்தி விட்டார்கள் என்பதுதான். அவர்களில் சிலர் தாங்கள் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறார்கள் என்பதற்குள் மட்டுமே அவரை மட்டுப் படுத்துகிறார்கள்; அவ்வளவுதான். இப்போது, யோசுவா நடந்த இடத்திலும், ஏனோக்கு நடந்த இடத்திலும் நம்மால் நடக்க முடியாவிட்டால், எப்படியாவது அங்கே நடக்க முயற்சிக்கும் வேறொருவரின் வழியில் நிற்க வேண்டாம். இதைக் குறித்து நாம் நியாயமாகச் சிந்திப்போம்: நீங்கள் அதை நம்பவில்லை என்றால், ஏன் மற்றவரின் வழியிலிருந்து விலகி, அவரை நடக்க விடக்கூடாது. உங்கள் கோட்பாடுகள் கற்பிக்கும் உயரத்திற்கு மட்டுமே உங்களால் நடக்க முடியுமானால், சரி, அப்படியானால் வழியிலிருந்து விலகி, அடுத்த மனிதனை... அவரைப் பின்னால் இழுக்க முயற்சிக்காதீர்கள்; அவரைத் தொடர்ந்து செல்ல விடுங்கள். ஆஹா, யோசுவா நடந்த இடத்தில் நடக்க நான் விரும்புகிறேன், நீங்கள் விரும்ப மாட்டீர்களா? ஓ, நான் இன்று பிற்பகல் வாசித்துக் கொண்டிருந்தேன், அது வேதாக மத்தில் தான் என்று நம்புகிறேன், யோசுவா கடந்து வந்த பிறகு, இஸ்ரவேலர்கள் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொண்டு, ஆற்றைக் கடந்து வந்தார்கள். அவர்கள் பழைய தானியங்களில் சிலவற்றைச் சாப்பிட்ட பிறகு, அது ஆயிர வருட அரசாட்சியின் ஒரு நிழலாட்டமாக இருந்தது... யோசுவா, ஒரு நாள் பிற்பகலில் வெளியே உலாவிக் கொண்டு, அந்தப் பெரிய யுத்தம் நடக்கவிருந்த சூழ்நிலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் நினைத்தேன், ஓ, ஆஹா, அது சரிதான். ஓ, சூழ்நிலையைப் பார்க்கும் போது, யுத்தம் எங்கே நடக்கும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அவர் இதுவரை நகர்ந்திருந்தார்; தேவன் அவரைக் கடந்து செல்லும்படி சொல்லியிருந்தார், ஆனால் அவர் இன்னும் "எரிகோவைப் பிடி" என்று சொல்லவில்லை. காண்கிறீர்களா? "இங்கே மட்டும் நகர்ந்து வாருங்கள்." 44 முந்தாநாள் ஒருவர் சொன்னார், "சகோதரர் பிரன்ஹாம், நான் எங்கே செல்ல வேண்டும்?" என்று கேட்டார். நான் இருந்த அடுத்த நகரமான ஷாவானோவில். அவர் சொன்னார்-அந்தச் சிறிய போதகர் கேட்டார், "நான் இப்போது எங்கே நகர வேண்டும்?" நான் கேட்டேன், "தேவன் உங்களை ஷாவானோவிற்கு நகர்த்தினாரா?" அவர், "ஆம்," என்றார். நான் சொன்னேன், "தேவன் வேறு எங்காவது நகரச் சொல்லும் வரை அங்கேயே இருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவர் உங்களை அங்கிருந்து அழைக்கும் வரை, அங்கேயே இருங்கள்." 45 மேலும்-மேலும் யோசுவா கடந்து சென்று, இஸ்ரவேலின் பாளயங்களை அமைத் திருந்தார். ஒரு நாள், அவர் சற்று உலாவிக் கொண்டு, எரிகோவின் மதில்களுக்கு அருகே வெளியே நடந்து கொண்டிருந்தார், திடீரென்று ஒரு மனிதன் மதிலுக்கு எதிரே நிற்பதை அவர் கண்டார். யோசுவா தனது பட்டயத்தை உருவி, அவரைச் சந்திக்க ஓடினார். அந்த மனிதரும் தமது பட்டயத்தை உருவி யோசுவாவைச் சந்திக்க வந்தார். யோசுவா தனது கையை உயர்த்தி, "நீர் எங்களைச் சேர்ந்தவரா, அல்லது எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரா?" என்று கேட்டார். அவர், "இல்லை, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் வந்திருக்கிறேன்," என்றார். ஆமென். ஓ, ஆஹா. என்ன நடந்திருந்தது? அந்த அக்கினி ஸ்தம்பம் மாம்சமாகி, அப்போது அங்கே நின்றது, அது கர்த்தருடைய சேனையின் அதிபதியாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு முன்-அடையாளமாகும். ஆமென். 46 அவர் சொன்னார், "இப்போது." அவர்கள் முழு ஆயுதவர்க்கத்தையும் தரித்துக் கொண்டார்கள். யோசுவாவைப் போல தேவனுடைய வார்த்தையை எடுத்துக்கொண்டு, ஒரு மதிலைச் சுற்றி நடந்து, அது கீழே விழும் வரை சத்தமிடும் அளவிற்கு நமக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு அந்த வகையான விசுவாசம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு அது இருந்தால், நிச்சயமாக நான் உங்கள் வழியில் நிற்க விரும்பவில்லை. அது சரிதான். ஏனோக்கைப் போல-அல்லது ஏனோக்கு அல்ல, எலிசாவைப் போல எனக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கலாம், அவர் தமது சால்வையை எடுத்து தண்ணீரை அடித்து, பரிசுத்த ஆவியின் ஒரு அடையாளமாகிய, எலியாவின் ஆவியின் இரட்டிப்பான பங்கைப் பெற்ற பிறகு கடலைக் கடந்து நடந்து சென்றார். அதைச் செய்வதற்கோ, அல்லது கொஞ்சம் தண்ணீரில் ஒரு கலசம் உப்பைப் போட்டு, அது கசப்பாக இருந்ததை நல்ல தண்ணீராக மாற்றுவதற்கோ எனக்கு விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். எனக்கு அந்த வகையான விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு அந்த வகையான விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு யாருக்காவது அது இருந்தால், அவர்கள் வழியில் நிற்காதீர்கள். அவர்களைத் தொடர்ந்து செல்ல விடுங்கள். அது சரிதான். 47 இந்தப் போதகர்கள், பல நேரங்களில், மக்களைச் சுட்டிக்காட்டி, "இப்போது, இங்கே பாருங்கள், அவன் வெகு தூரம் சென்றதை நீங்கள் காண்கிறீர்களா? அவன் தன் புத்தியை இழக்கும் அளவுக்கு வெகு தூரம் சென்று விட்டான்," என்று சொல்ல விரும்புகிறார்கள். அந்தப் போதகர்கள் அப்படிச் சொல்வதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால், கொஞ்சம் வெறித்தனமாகி, வெகு தூரம் சென்றதால் தன் புத்தியை இழந்த ஒரு நபரைக் காணும்போது, அதைப் பற்றி அவர்கள் சொல்லத் தவறு கிறார்கள். அவர்கள் சிறிதும் செல்லாத காரணத் தினால் தங்கள் புத்தியை இழந்த பல்லாயிரக் கணக்கானவர்களைச் சுட்டிக்காட்டத் தவறு கிறார்கள். அது சரிதான். அவர்கள் போதுமான தூரம் செல்லவில்லை. இப்போது, காரியங்களைக் குறித்து நாம் நியாயமாகச் சிந்திப்போம். வாருங்கள் நாம் ஒன்றாக இணைந்து சிந்திப்போம். நம்மிடம் வெறித்தனமானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் இங்கு சிகாகோவிலும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள், ஆனால் நம்மிடம் சில உண்மையான, பரிசுத்த ஆவியின் மூலப்பொருளும் உள்ளது. நாம் ஒன்றாக இணைந்து சிந்திப்போம். ஆம், அவர்கள்-வெகு தூரம் சென்ற அந்த நபரைச் சுட்டிக்காட்ட அவர்கள் நிச்சயமாக விரும்புவார்கள், ஆனால் போதுமான தூரம் செல்லாததால் தங்கள் புத்தியை இழந்த பல்லாயிரக்கணக்கானவர்களைச் சுட்டிக்காட்ட அவர்கள் தவறுகிறார்கள். அது சரிதான். 48 கொஞ்ச காலத்திற்கு முன்பு, "எனக்குத் தெரியும்," என்று சொல்லும் ஒருவரின் கட்டுரையை நான் வாசித்துக் கொண்டிருந்தேன். சரி, நான் உங்களுக்கு மற்றொரு சம்பவத்தைச் சொல்கிறேன். நான் இந்தியானாவில் உள்ள ஒரு முதியவரிடமிருந்து சில ஆப்பிள்களை வாங்கு வதற்காக நின்றேன். அவர் எப்போதும், ஒரு நல்ல முதியவர். நான் அவரிடமிருந்து சில ஆப்பிள்களை வாங்கிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார்-என் சிறிய சரக்கு வாகனத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னார், "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாத வராயிருக்கிறார்." அவர் அங்கே பார்த்துவிட்டு, "ஹ்ம்," என்று சொல்லி, "ஓ, ஜெபர்சன்வில், நீங்கள் ஜெபர்சன்வில்லில் வசிக்கிறீர்களா?" என்று கேட்டார். நான், "ஆம், ஐயா," என்றேன். அவர் சொன்னார், "சொல்லுங்கள், அங்கே இருக்கும் அந்தக் குணமாக்குபவரை உங்களுக்குத் தெரியுமா?" நான் சொன்னேன், "இல்லை, எனக்குத் தெரியும் என்று நான் நம்பவில்லை." அவர் சொன்னார்... நான் கேட்டேன், "எந்தக் குணமாக்குபவர்?" அதற்கு அவர், "ஓ, அங்கே ஒரு குணமாக்குபவர் இருக்கிறார்," என்றார். மேலும், "அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா?" என்று கேட்டார். நான், "இல்லை," என்றேன். நான் சொன்னேன், "நான் ஒரு குணமாக்குபவரைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன், ஜெபர்சன் வில்லில் மட்டுமல்ல, உலகமெங்கிலும், இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்." அவர் சொன்னார், "பார்க்கலாம், இந்த நபரின் பெயர் பிரன்ஹாம், அல்லது அதுபோல ஏதோவொன்று." நான் சொன்னேன், "ஓ, ஆம்." நான் சொன்னேன், "எனக்கு அவரைத் தெரியும்." அதற்கு அவர் சொன்னார், "சரி, நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? அவர் உலகத்திலேயே மிகப் பெரிய மாயமாலக்காரர்." நான் கேட்டேன், "அப்படியா?" நான் சொன்னேன், "சரி," நான் சொன்னேன், "அது அவருக்குச் சம்மதமே என்று நான் நினைக் கிறேன்." காண்கிறீர்களா? நான் சொன்னேன், "எல்லோரும் அப்படி நினைப்பதில்லை." நான் சொன்னேன், "எப்படியிருந்தாலும், அப்படி நினைக்காதவர்களில் நானும் ஒருவன்." 49 அவர் சொன்னார்-சரி, அவர் சொன்னார், "உங்களுக்குத் தெரியுமா," என்றார், "இங்கேயுள்ள இன்னார் என்ற அந்த வயதான பெண்மணியை, அங்கே அழைத்துச் சென்ற ஒருவரை எனக்குத் தெரியும். அவளுக்கு மூட்டுவலி இருந்தது." மேலும் சொன்னார், "அவர்கள் அவளை அங்கே அழைத்துச் சென்றார்கள், அவளுக்காக ஜெபிக்கப்பட்டது, அவளுக்குச் சிறிதும் குணமடையவே இல்லை, ஒரு துளி கூட இல்லை." நான் அவரிடம் கேட்டேன், "நீங்கள் எந்தச் சபைக்குச் செல்கிறீர்கள்?" என்று. அவர் என்னிடம் கூறினார். "ஓ," நான் சொன்னேன், "எனக்குப் புரிகிறது." அவர் சொன்னார், "சரி, நீங்கள் எப்போ தாவது அந்த நபரைப் பார்த்தால், அவர் ஒரு மாயமாலக்காரர் என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்லுங்கள்." நான் சொன்னேன், "நீங்கள் இப்போது அவரிடமே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்." அவர் கேட்டார், "நீங்கள் தானா அவர்?" நான் சொன்னேன், "அது சரிதான்." நான் சொன்னேன், "அது சரிதான்." எனவே அவர் சொன்னார்... இப்போது, அங்கே பாருங்கள், குணமடையப் போதுமான விசுவாசம் இல்லாத ஒருவரை யாராவது சுட்டிக்காட்டுவார்கள். குணமடைந்த பல்லாயிரக் கணக்கானவர்களைச் சுட்டிக்காட்ட அவர்கள் தங்கள் மனதளவில் போதுமான நேர்மையற் றவர்களாகவும், வெட்கக்கேடாகவும் இருக்கும் போது. 50 இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியானது, அதில் ஒரு கிறிஸ்தவ அறிவியல் (Christian Science) பெண்மணி, இங்கு ஒரு கிறிஸ்தவ அறிவியல் நபர் இருந்தால், உங்கள் மீது எனக்குப் பெரும் மரியாதை இருக்கிறது, உங்களுக்கு எதிராகச் சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமே இல்லை. இறையியலில் மட்டுமே, நான் வேறுபடுகிறேன். வியாதிகள் வெறும் எண்ணங்கள் என்று நான் நம்பவில்லை, அவை நிஜமானவை என்று நான் நம்புகிறேன்; அவை பிசாசு. அவை உருவமுள்ள பிசாசு. நீங்கள் வியாதியாயிருந்தால், நீங்கள் நிஜமாகவே வியாதியாயிருக்கிறீர்கள் என்று நான் நம்புகி றேன், ஆனால் தேவனே குணமாக்குபவர், அவரால் குணமாக்க முடியும். எனவே நான்... ஆனால் அது பரவாயில்லை, நீங்கள் எதை நம்பினாலும், சரி, அது உங்களைப் பொறுத்தது. ஆனால் இந்தக் கிறிஸ்தவ அறிவியல் பெண்மணிக்கு வியாதிப்பட்ட ஒரு குழந்தை இருந்தது, அக்குழந்தைக்கு குடல்வால் அழற்சி (appendicitis) இருந்தது என்று நான் நம்புகிறேன். நீங்கள் அனைவரும் அதைச் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள்; ஒரு வேளை அது எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு இருக்கலாம். அவள் ஒரு மருத்துவரை அணுகவில்லை. இப்போது, நான் அதனுடன் உடன்படவில்லை, நான்-நான் அது பரவாயில்லை. மருத்துவர்களுக்கும் மருத்துவ மனைகளுக்கும் எதிராக என்னிடம் ஒன்று மில்லை, ஏனென்றால் எப்படியிருந்தாலும் தேவனே குணமாக்குபவர்; அவர்கள் என்ன செய்தாலும், அவர்களால் குணமாக்க முடியாது. 51 எனவே அவள் மருத்துவரை அணுகவில்லை. அவள் "இல்லை," என்றாள், தங்கள் குழந்தை எப்படியும் குணமாகப் போகிறது என்றாள், ஆனால் குழந்தை இறந்துவிட்டது. ஓ, ஆஹா, செய்தித்தாள்கள் அதை எடுத்துக் கொண்டனவா, கலிபோர்னி யாவிலிருந்து மெய்ன் வரை அதை அவர்கள் பரப்பினார்கள். "ஓ, தெய்வீக சுகமளித்தல் தவறானது. அது வெறித்தனம்; அது தவறான உபதேசம்; அது நிறுத்தப்பட வேண்டும். இங்கே பாருங்கள், ஒரு வெறித்தனமான தாய் மருத்து வரை அணுகாததால், அந்தப் பரிதாபமான சிறிய குழந்தை தன் உயிரை இழந்தது." அந்தச் செய்தித்தாள் பொதுமக்களின் முன் இருந்த அதே நேரத்தில், மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றார்கள், அதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. நாம் நியாயமாகச் சிந்திப்போம். 52 கர்த்தரை நம்பி, விடுதலையைப் பெறுவதற்கான விசுவாசம் இல்லாத காரணத் தால் ஒரு நபர் இழக்கப்பட்டால், தேவனுடைய வேலைகள் அனைத்தும் வெறித்தனம் என்று அழைக்கப்பட வேண்டுமானால், மருத்துவர் ஒரு நோயாளியை இழந்தால், அதுவும் வெறித் தனமே. "ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா." அந்தப் பழைய பழமொழி உங்களுக்குத் தெரியும். எனவே அது முற்றிலும் நியாயமானது. அது சரியா? இப்போது, அது உண்மை. இல்லை, நாம், மருத்துவர்கள், நிறுவனங்கள், போதகர்கள், அனைவரும் மனிதர்களின் நன்மைக்காகச் செயல்பட முயற்சி செய்து, ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் விமர்சித்துக் கொண்டிருக்கக் கூடாது, அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், நிச்சயமாக ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். இப்போது, சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், இன்றிரவு நான் இங்குள்ள உங்கள் கல்லறைத் தோட்டத்திற்கு, சிகாகோவில் உள்ள உங்களின் பெரிய கல்லறைத் தோட்டங்களில் ஒன்றிற்குச் சென்று, கல்லறையில் உள்ள ஒவ்வொரு நபரையும் எழுப்பி, "இப்போது, கர்த்தரை நம்பி மரித்த ஒவ்வொருவரும், இந்தப் பக்கத்தில் இங்கே நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மருத்துவ சிகிச்சையின் கீழ் மரித்த ஒவ்வொருவரும், இந்தப் பக்கத்தில் நில்லுங்கள்" என்று சொன்னால் என்ன நடக்கும். எது அதிகமாக இருக்கும்? நாம் நியாயமாகச் சிந்திப்போம். வாருங்கள் நாம் ஒன்றாக இணைந்து சிந்திப்போம். 53 இப்போது, இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, இந்தப் பெரிய-நான்-இன்றிரவு நான் இங்கே நிரூபித்தபடி, நான் உங்களை அழைக்கவில்லை, நான்... நீங்கள் ஒரு நிமிடம் அமைதியாக அமர்ந்திருங்கள். காண்கிறீர்களா? இப்போது, கவனியுங்கள், இங்கே-இது-அவர்கள் ஒருவருக்கு உதவி செய்யும்-உதவி செய்யும் எந்த வகையான மருந்தைக் கண்டு பிடித்தாலும், ஆஹா, செய்தித்தாள்கள் அதை எல்லா இடங்களிலும் வெளியிடுகின்றன. ஆஹா, பென்சிலின், அல்லது வேறு ஏதாவது, ஓ, அதை எப்படி அவர்கள் எல்லா இடங்களிலும் உடனே பரப்புகிறார்கள். இந்த சால்க் தடுப்பூசி (Salk vaccine), மற்றும் பலவற்றை, மக்களுக்கு உதவி செய்யும் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்ததால், அதை எப்படி அவர்கள் எல்லா இடங்களிலும் பரப்பினார்கள். நான் அந்த மக்களுக்கு சல்யூட் செய்கிறேன்; தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதை அவர்கள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு சிறிய செய்தித்தாளிலும் வெளியி டுவார்கள். சர்வவல்லமையுள்ள தேவன் குருடர்களைப் பார்க்கவும், செவிடர்களைக் கேட்கவும், ஊமையர்களைப் பேசவும் வைக்க முடியும், ஆனால் அதை அவர்கள் நிராகரித்து செய்தித்தாளில் போட மாட்டார்கள். "அது வெறித்தனம்," என்று சொல்வார்கள். 54 வாருங்கள், நாம் ஒன்றாக இணைந்து சிந்திப்போம். மனிதர்களாக இருங்கள். அது சரியா? நிச்சயம். மேலும் கேளுங்கள், எப்போதும் இல்லை... இப்போது, நான் இதை மரியாதையுடன் சொல்கிறேன்; இதை ஒரு நியாயமான விஷயமாகச் சொல்கிறேன். நாம் விரும்புகிறோம்-இன்றிரவு நாம் நியாயமான, பொது அறிவுள்ள காரியங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். பாருங்கள், மருந்து எவ்வளவு குணப்படுத்துகிறதோ ஏறக்குறைய அதே அளவு கொல்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அது யாரையும் குணப்படுத்துவதில்லை, ஆனால் அது உதவுகிறது. அது சரிதான். தேவன் சுகமளிக்கும்போது-அது இயற்கைக்கு உதவி செய்து, அதைச் சுத்தமாக வைத்திருக்கிறது. பாருங்கள் எவ்வளவு மக்கள்-இந்த சால்க் தடுப்பூசி வந்தபோது பாருங்கள், அந்தத் தடுப்பூசியால் இறந்த ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகளைப் பாருங்கள். போலியோவைத் தடுப்பதற்காக அந்தப் பிள்ளைகளுக்கு அதை வழங்கி அவர்களைக் கொன்றார்கள். சரி, அப்படியானால், யாராவது ஒரு வியாதிக் காரனுக்காக ஜெபித்து அவன் இறந்துவிட்டால், "வெறித்தனம்," என்று சொல்கிறார்கள். அவர்கள் தடுப்பூசியைக் கொடுத்துவிட்டு, "மகிமை, அல்லேலூயா, ஓ, அது என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள். ஆஹா இந்தச் சிறந்த நபர் இதைக் கண்டுபிடித்தார்," என்கிறார்கள். அது சரியா? 55 எனது தந்தை ஒருவேளை மருந்தினால் கொல்லப்பட்டார், என்னுடைய சொந்த தந்தை. மருத்துவர் அவரைப் பார்க்க வந்தார்; அவருடைய இருதயத்தில் ஏதோ பிரச்சனை இருந்தது. அவர் அவருக்கு ஒரு சிறிய மாத்திரையைக் கொடுத்தார்; அவர் ஐந்து நிமிடம் வாழ்ந்தார். நாங்கள் மற்றொரு மருத்துவரை அழைத்தோம், அவர் கூறினார், "சரி, அவர்-அவர் அவருக்கு ஸ்ட்ரிக்னைன் (strychnine) கொடுத்திருக்கிறார்." அவர் சென்று அந்த ஸ்ட்ரிக்னைனை எடுத்தார்; அது அரை தானியம் அளவு (half grain) ஸ்ட்ரிக்னைன். அவர் கூறினார், "உங்கள் அப்பாவை எனக்குத் தெரியும்," அவர் சொன்னார், "அவருடைய-அவருடைய இருதயம் நாற்பதில் ஒரு பங்கு ஸ்ட்ரிக்னைனைத் தாங்கியிருக்காது." ஆனால் ஒருவேளை மருந்து என் தந்தையைக் கொன்றது. 56 ஒருவேளை மருந்து என் சிறுவன் பில்லி பாலைக் கொன்றிருக்கும். சுமார் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு, பில்லி பால் ஒரு பழக்கத்திற்கு ஆளாகி, அங்கே சுற்றிக்கொண்டிருந்தான், அந்த காரணத்தினால் தான் நான் அவனை வாக்ஸாஹாச்சியில் (Waxahachie) உள்ள பள்ளிக்கு அனுப்ப வேண்டியிருந்தது. நமது பொதுப் பள்ளியில், சின்னப் பையன்கள் கூடி சிகரெட் பிடிப்பது போன்ற காரியங்களைச் செய்துகொண்டிருந்தனர். ஒரு நாள் பில்லி வீட்டிற்கு வந்து, "எப்படி இருக்கிறீர்கள், அப்பா?" என்று கேட்டான். அவன் மேல் ஒரு தரிசனம் தோன்றுவதை நான் கண்டேன். நான், "ஒரு நிமிடம் இங்கே வா, உன்னிடம் பேச வேண்டும்," என்றேன். அவன், "என்ன, அப்பா?" என்று கேட்டான். நான் கேட்டேன், "சிகரெட் குடித்துக் கொண்டு நீ என்ன செய்கிறாய்?" அவன், "நான் அப்படிச் செய்யவில்லை," என்றான். நான் சொன்னேன், "என்னிடம் பொய் சொல்லாதே, பில்லி." அவன் அழத் தொடங்கினான். சரி, அவன் சொன்னான், "நான்-நான் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன், அப்பா." அவன் வெளியே சென்றான். அவன் அதைத் தொடர்ந்து செய்தான். அவன் அதை மறைக்கவில்லை; அவனால் அதை மறைக்க முடியாது, இல்லை, இல்லை. எனவே-நான் ஒரு தரிசனத்தைக் கண்டேன், பில்லி எனக்குக் கீழ்ப்படியாமல், ஒரு ஜன்னல் வழியாகக் குதித்து, அப்படித் தலைகீழாக, கீழே, நித்தியத்தின் ஊடாக, மீண்டும் மீண்டும் சுழன்று சிரித்துக்கொண்டே செல்வதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். நான் தரிசனத்திலிருந்து வெளியே வந்ததும், என் சத்தத்தின் உச்சிவரை நான் கத்தினேன், "ஓ, தேவனே, என் மகனை எடுத்துக்கொள்ளாதீர். என்னிடமுள்ள ஒரே மகன், அவனை எடுத்துக்கொள்ளாதீர், கர்த்தாவே." நான் என் சத்தத்தின் உச்சிவரை கத்திக் கொண்டிருந்தேன். நான் பில்லியிடம் சொன்னேன். 57 எனவே, பில்லி, அந்த நாளில், மீன்பிடிக்கச் சென்றான். அவன் நதிக்கரையில் நிறைய நேரம் சுற்றிக் கொண்டிருந்தான். இந்தியாவிலிருந்து ஒரு மனிதர் என்னைப் பார்க்க வந்திருந்தார், மேலும் சில போதகர்களும் இருந்தார்கள். என் மனைவியுடன் நாங்கள் நியூ அல்பானிக்கு (New Albany) சென்றோம். அவள் ஏதோ வாங்குவதற்காக அங்கே செல்ல வேண்டியிருந்தது. எனவே, நாங்கள் சென்றோம், நான் போதகர்களுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தேன், திடீரென்று, ஏதோ ஒன்று என்னிடம், "இங்கிருந்து-மிக விரைவாக வெளியே செல்," என்று சொன்னது. அது என்னுடைய கற்பனை என்று நான் நினைத்தேன். நான்-நான் சொன்னேன், "சரி இப்போது, சகோதரர்களே, நம்மால் முடிந்தவரை விரைவில் இந்தியா செல்ல நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறோம்." ஏதோ ஒன்று, "இங்கிருந்து வெளியேறி, தனியாகச் செல்," என்று சொன்னது. நான் காரிலிருந்து இறங்கி, "என்னை மன்னியுங்கள், சகோதரர்களே, ஒரு நிமிடம், நான் இந்த மூலையைச் சுற்றிப் போக வேண்டும்," என்று சொன்னேன். நான் அங்கே சுற்றிச் சென்றேன், நான் பார்த்தேன், யாரும் பார்க்கவில்லை, நான் கேட்டேன், "பிதாவே, என்ன அது?" "உடனே பில்லி பாலிடம் செல்," என்று சொல்லப்பட்டது. 58 நான் மிக விரைவாக ஓடி வந்தேன், என் மனைவி மீதா (Meda) தெருவில் வந்து கொண்டிருந்தாள், நான் சொன்னேன், "சீக்கிரம் அன்பே, சீக்கிரம். பில்லிக்கு ஏதோ ஆகிவிட்டது." நாங்கள் ஓடி, ஒரு காரில் குதித்து, சுமார் ஐந்து அல்லது ஆறு மைல் தொலைவில் உள்ள ஜெபர்சன்வில்லுக்குப் புறப்பட்டோம். நான் முற்றத்திற்குச் சென்ற போது, என் மாமியார் முற்றத்தில் நின்று கொண்டு, என் சத்தத்தின் உச்சிவரை கத்தி, "பில்லி சாகப் போகிறான், அவனை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்," என்று சொன்னார். நான் கேட்டேன், "என்ன நடந்தது?" அவர் சொன்னார், "சரி, அவன் அங்கே கீழே வந்தான், அவனுக்குத் தொண்டை வலி இருந்தது. அந்தத் தொண்டை வலியுடன் நீங்கள் அவனைக் கண்டுபிடித்துவிட்டு, அவன் இன்னும் சிகரெட் குடிக்கிறான் என்று சொல்வீர்கள் என்று அவன் பயந்தான். அவன் கீழே சென்றான், உங்கள் நல்ல நண்பரான," தேசத்திலேயே சிறந்த மருத்துவரான, மிகச் சிறந்தவர்களில் ஒருவரான, "டாக்டர் சாம் அடேர் (Dr. Sam Adair), அவனுக்கு பென்சிலின் ஊசி போட்டார், சுமார் மூன்று நிமிடங்களில் அவன் இவ்வளவு பெரியதாக வீங்கிவிட்டான். அவர் அங்கே ஓடினார், அவர்கள் அவனைக் போர்வைகளில் சுற்றி, மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றார்கள்." 59 நான் மிக விரைவாக வெளியே ஓடினேன், இதோ மருத்துவர் அப்படி இறங்கி வந்தார், தன் தொப்பியைக் கழற்றிவிட்டு, "பில், நான் உன் மகனைக் கொன்றுவிட்டேன்," என்று சொன்னார். நான் சொன்னேன், "ஓ, டாக்டர், நிச்சயமாக இல்லை." நான் அறைக்குள் ஓடினேன்; அவர்கள் அவனுக்கு ஆக்ஸிஜன் மற்றும் எல்லாவற்றையும் வைத்திருந்தார்கள், பம்ப் செய்து கொண்டும், அவனுடைய இருதயத்திற்கு அட்ரினலின் (adrenalin) கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். அவன் வெறும்... இருதயம் அப்படியே கீழே, கீழே சென்று கொண்டிருந்தது. நான் அவனுடன் ஒரு நிமிடம் இருக்க முடியுமா என்று கேட்டேன். எனவே அவர் அறையை விட்டு வெளியேறினார். நான் முழங்கால் படியிட்டு, என் கைகளை அவன் மேல் வைத்தேன்; நான் சொன்னேன், "அன்பான தேவனே, தயவுசெய்து. என் நாட்களில் என் இதயம் போதுமான அளவு நொறுங்க வில்லையா? தயவுசெய்து, இயேசுவே, ஓ, தேவனே, அந்தச் சிறுவனுக்கு இன்னொரு வாய்ப்பைக் கொடும். வேண்டாம்... கர்த்தாவே, தயவுசெய்து, உம்முடைய தாசனாக என் முழு இருதயத்தோடும் நான் உம்மிடம் கேட்கிறேன், நீர் என் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியுமா. அவன் என்னிடம் மிகவும் நல்லவனாக இருக்கிறான், கூட்டங்களில் உதவுகிறான், அவன் எனக்கு மிகவும் உண்மையுள்ளவனாக இருக்கிறான். எனக்கு அவன் தேவை. தேவனே, தயவுசெய்து அவனை எடுத்துக்கொள்ளாதீர். நான்-நான் உம்மிடம் வேண்டிக்கொள்கிறேன்." 60 நான் பார்த்தேன், அவனைக் குறித்து ஒரு சில இரவுகளுக்கு முன்பு தரிசனத்தில் நான் கண்டதுபோலவே, அவன் அப்படியே கீழே விழுந்து, மீண்டும் மீண்டும் சுழல்வதான ஒரு தரிசனத்தைக் கண்டேன். இரண்டு பெரிய கைகள் வெளியே வந்து அவனை இப்படிப் பிடித்து, அவனை நேராக மேலே தாங்கிக் கொண்டு, அப்படியே நேராக மேலே செல்வதை நான் கண்டேன். நான் எழுந்தேன், பில்லி திரும்பினான், அவன் எவ்வளவு கறுப்பாக முடியுமோ அவ்வளவு கறுப்பாக இருந்தான். அவனுடைய உதடுகள் பெரிதாக வீங்கியிருந்தன, அவனுடைய கண்கள் மிகவும் சிவப்பாக மாறி, பின்னால் திரும்பியிருந்தன. அவன், "அப்பா, நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், அப்பா?" என்று கேட்டான். நான் சொன்னேன், "நான் இங்கேயே நிற்கிறேன், அன்பே. இப்போது எல்லாம் முடிந்துவிட்டது." ஆமென். 61 நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவன் மட்டும் இல்லாவிட்டால், ஒரு வேளை மருந்து என் மகனைக் கொன்றிருக்கும். அதற்கு நிகராக ஏதுமில்லை, பென்சிலின், சல்பா மருந்து போன்றவற்றால் பலருக்கும் உதவியிருக்கிறது, போர்க்களத்தில் உள்ள இளைஞர்களுக்கும் அது போன்ற காரியங்களுக்கும், ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டும், அது நூற்றுக் கணக்கானோரைக் கொன்றுள்ளது. அது உண்மை தான். ஆனால் அது ஒருவரைக் கொன்றால், நான் சொல்ல வருவது என்னவென்றால்-இதுதான் என் கருத்து, அது ஒருவரைக் கொன்றால், அது வெறித்தனம். வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்து, அந்த நபர் மரித்துவிட்டால், அதை நீங்கள் வெறித்தனம் என்று அழைக்க வேண்டும் என்றால், இதுவும் வெறித்தனமாகத்தான் இருக்க வேண்டும். அது சரியா? இது இரண்டுமே வெறித்தனம் அல்ல; காரியங்களை நியாயமாகச் சிந்தித்துப் பார்க்க முடியாத மக்கள், பகுத்தறிவற்ற மக்கள்தான் அப்படிச் சொல்கிறார்கள். உலகிலுள்ள எல்லா தேசங்களிலும் நான் பார்த்ததிலேயே, இந்தக் காரியங்களில் நமது அன்பான அமெரிக்க மக்களே மிகவும் பகுத்தறிவற்ற மக்களாக இருக்கிறார்கள். அது உண்மைதான். மிகவும் பகுத்தறிவற்றவர்கள், அவர்கள் கேட்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் உட்கார்ந்து அதைப்பற்றிச் சிந்திக்க மாட்டார்கள். 62 இந்தக் காரியங்களை விசுவாசிக்கிற முழு சுவிசேஷ (Full Gospel) மக்களாகிய உங்களை நான் குறிப்பிடவில்லை; அது சபைகளைப் பற்றியது. என் சகோதரர்களே, நான் வந்த என் பாப்டிஸ்ட் சபைக்கு விரோதமாக என்னிடம் ஒன்றும் இல்லை. பிரிஸ்பிடேரியன், லூத்தரன், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் என் சகோதரர்கள். ஆனால் இவ்வளவு பகுத்தறிவற்ற தன்மையிலிருப்பதற்கு காரணம், அந்த-அந்தப் பிரிவுகள் தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. விசுவாசப் பிரமாணங்களும் மற்றவைகளும் அவர்களைத் துண்டித்துவிட்டன. அவர்களில் சிலர் விசுவாசிக்கிறார்கள். என்னிடம் சொல்லாதீர்கள்; அவர்கள் நேராக என் போதகர் இல்லத்திற்கு வந்து என்னிடம் பேசுகிறார்கள், என்னை அணைத்துக் கொண்டு சொல்கிறார்கள்-என் தோள் மீது கைபோட்டு, "சகோதரர் பிரான்ஹாம், நான் இதை விசுவாசிக்க விரும்புகிறேன், ஆனால் அப்படிச் செய்தால், நான் சபையிலிருந்து நீக்கப்படுவேன்" என்று சொல்கிறார்கள். நான் சொன்னேன், "தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக, நீங்கள் இங்கே சபையிலிருந்து நீக்கப்பட்டால், அங்கே (பரலோகத்தில்) சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்." நான் சொன்னேன், "வேண்டாம்-நீங்கள் இந்தக் காரியத்தை விட்டுவிடுங்கள்." 63 நான் விரும்புவது-இது ஒரு சாப்பாட்டுச் சீட்டு, சகோதரனே. ஒரு நாளைக்கு மூன்று வேளை வறுத்த கோழிக்கறி சாப்பிட்டுக்கொண்டு, சமரசம் செய்வதை விட, நான் என் வயிற்றின் மேல் படுத்துக்கொண்டு, ஓடைத் தண்ணீரைக் குடித்து, சோடா பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக்கொண்டு சத்தியத் தைப் பிரசங்கிப்பதையே விரும்புவேன். அது உண்மைதான். ஆம், ஐயா. சத்தியத்தைக் கொண்டிருக்க... பகுத்தறிவுடன் இருங்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மட்டும் இல்லா விட்டால், இன்றிரவு தங்கள் கல்லறைகளில் இருந்திருக்க வேண்டிய ஆயிரக்கணக்கான மக்களை இன்றிரவும், தேசம் முழுவதிலும் நாம் நிரூபிக்க முடியும். நாம் ஒருவரோடொருவர் நியாயமாகச் சிந்திப்போம். பகுத்தறிவுடன் இருங்கள். தேவன் காரியங்களை நியாயமாகவே செய்கிறார், நாமும் நியாயமாக சிந்திப்போம். 64 இப்போது, இன்னும் ஒன்று அல்லது இரண்டு கருத்துக்கள், பிறகு நாம்-நாம் நிறுத்துவோம். இப்போது, மருத்துவர்கள் தங்கள் மருந்துகளைப்பற்றி எவ்வாறு கண்டு பிடிக்கிறார்கள்? உங்களுக்குத் தெரிந்த முதல் காரியம், யாரோ ஒருவர் ஆராய்ச்சி செய்து அதைப் பெறுகிறார், அவர்கள் அதைக் கண்டுபிடித்து, அது வேலை செய்யும் என்று அறிந்து, அதை ஒரு புத்தகத்தில் எழுதுகிறார்கள். இன்னொரு மருத்துவர் இந்த மருத்துவப் பத்திரிகையை எடுத்துக்கொள்கிறார்; அவர் சொல்கிறார், "சரி, இங்கே, இது இன்னின்ன காரியங்களைச் செய்கிறது; நான் இதைப் பயன்படுத்தத் தொடங்குவேன்." அப்படித்தான் அவர்கள் செய்கிறார்கள்: வாசிப்பதன் மூலமாகவோ அல்லது கேட்பதன் மூலமாகவோ அவர்கள் அதைக் கண்டு பிடிக்கிறார்கள். எனவே நமக்கும், விசுவாசம் வாசிப்பதினாலோ அல்லது கேட்பதினாலோ வருகிறது. நான் இன்றிரவு செய்கிற காரியம்-இந்தத் தரிசனங்களும் காரியங்களும் மிகவும் மர்மமானவை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், நான் அதை ஒரு புத்தகத்திலிருந்து வாசித்தேன். அல்லேலூயா. இந்தப் புத்தகம் வேதாகமத்தைத் தவிர வேறொன்றுமில்லை, மேலும் இதன் ஆசிரியர் ஒரு கண்டுபிடிப்பாளர் அல்ல; அவர் தெய்வீக சுகமளிப்பதாக வாக்குத்தத்தம் செய்த சிருஷ்டிகரே (ஆமென்) தவிர வேறு யாருமல்ல. அவர் அந்தப் புத்தகத்தை எழுதினார்; அவர் அதை ஏவினார். அது தேவனால் ஏவப்பட்ட வார்த்தையாகும். 65 மருத்துவப் பயிற்சி செய்து வெற்றி பெற்ற மற்ற மருத்துவர்களைப் பற்றி நீங்கள் வாசிப்பது போலவே, நானும் இதில் வாசிக்கிறேன். அப்போஸ்தலர்களும் தீர்க்கதரி சிகளும் தரிசனங்களைக் கண்டு, தெய்வீக சுகமளிப்பைப் பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றதை நான் வாசிக்கிறேன். எனக்கு உரிமை உண்டு; இதுதான் என் மருத்துவப் பத்திரிகை. ஆமென். நான் இதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். அதில் நான் வெற்றி பெறுகிறேன், அது என்னால் அல்ல, ஆனால் நான் இந்தப் புத்தகத்தின் அறிவுரை களைப் பின்பற்றுவதாலேயே. ஆமென். அல்லேலூயா. அவர் இங்கு பூமியில் இருந்தபோது, அவர் பிரசங்கித்ததையே செய்தார். அவரிடத்தில் அதை நான் விரும்புகிறேன். அவர் பிரசங்கித்ததையே செய்தார். அவருக்கு எக்ஸ்ரே-கள் எதுவும் தேவைப்படவில்லை; அவரே எக்ஸ்ரே-யாக இருந்தார். என்ன தவறு என்பதை அவர் கண்டார்; அவருக்கு எந்த எக்ஸ்ரே-யும் தேவைப்படவில்லை, இன்றிரவும் அவர் அதே போல இருக்கிறார். ஜீவனைத் தூண்டுவதற்கு அவருக்கு எந்த மருந்துகளும் தேவைப் படவில்லை; அவரே ஜீவனாக இருந்தார். ஆமென். அவருக்கு எந்த நிவாரணங்களும் தேவைப்படவில்லை; அவரே குணமாக இருந்தார். ஆமென். இன்றிரவும் அவர் அதே போல இருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, அவரே தேவனுடைய எக்ஸ்ரே என்பதை நிரூபித்தார். 66 காலத்தின் ஓட்டத்தின் வழியாக தேவன் நேராகக் கீழே பார்க்கிறார், உங்கள் இருதயத்தில் உள்ள பெளதிகமானதை மட்டும் அவர் பார்க்கவில்லை, ஆனால் உங்கள் இருதயத்தில் உள்ள இயற்கைக்கு அப்பாற்பட்டதையும் அவர் பார்க்கிறார். அவர் உங்கள் எண்ணங்களைப் பார்க்கிறார். ஆமென். இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்தார். எக்ஸ்ரே-யைப்பற்றிப் பேசுங்கள் (ஆமென். அல்லேலூயா.), அவரே தேவனுடைய எக்ஸ்ரே-யாக இருந்தார், அவர் அப்படியாக இருந்தது மட்டுமல்ல, அவர் இன்னமும் அப்படியே இருக்கிறார். இன்றிரவு அவரே தேவனுடைய எக்ஸ்ரே-யாக இருக்கிறார். அவர் உங்களிடம் சொல்கிறார்; உங்களுக்கு என்ன வியாதி என்று அவருக்குத் தெரியும். உங்களைப்பற்றிய எல்லாம் அவருக்குத் தெரியும். உங்களைப்பற்றி உங்களுக்குத் தெரிந்தி ருப்பதை விட அவருக்கு அதிகமாகத் தெரியும். அவர் ஜீவனைத் தூண்டுகிறவர்; அவர் ஜீவனைக் கொடுக்கிறவர். அவர் உங்களுக்கு வைட்டமின்களைக் கொடுக்கத் தேவையில்லை; அவரே வைட்டமின், வைட்டமின் இ-யே-சு (J-E-S-U-S), எனக்குத் தெரிந்த சிறந்த வைட்டமின், நான் விரும்பும் ஒரே வைட்டமின். ஆமென். இ-யே-சு, எப்போதாவது அவைகளை முயற் சித்துப் பாருங்கள்; அவை அற்புதமானவை. ஆசீர்வாதங்கள், அவை அப்படியே கீழே விழுகின்றன, ஆவிக்குரிய வைட்டமின்கள். ஓ, என் தேவனே, நான் அவைகளை எவ்வளவு நேசிக்கிறேன். அவற்றின் மழைகள், நிச்சயமாக உங்கள் மேல் மழையாகப் பொழியும். 67 அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, அவர் இன்னமும் அதே மகத்தான யெகோவா என்பதை நிரூபித்தார். எம்மாவுவுக்குப் போகிற வழியில், அந்த நாளில், அந்த மனிதர்கள் அங்கே நடந்து சென்றபோது, கிளெயோப்பாவும் அவனது நண்பர்களும், எம்மாவுவுக்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பயணத்தில், அது... இயேசு அவர்களுடன் வீட்டிற்குள் சென்றபோது, அவர் அங்கே ஒன்றைச் செய்தார் அது... நாள் முழுவதும் அவர்கள் அவருடன் நடந்தார்கள்; அவர்கள் அவரை அறியவில்லை, ஆனால் அவர் உள்ளே சென்று, அவர்களை அமரச் செய்தபோது, அவர் வழக்கமாகச் செய்வது போல் ஒன்றைச் செய்தார். அவரைப்போல வேறு யாராலும் அப்படிச் செய்ய முடியாது. அவர் வழக்கமாகச் செய்யும் விதத்திலேயே அதைச் செய்தார். அது வெறும் சரித்திரத்தை விட மேலானது என்று நான் நம்புகிறேன்; அது ஒரு உவமை. என்னை மன்னியுங்கள், சகோதரர்களே, ஆனால் அது ஒரு தீர்க்கதரிசனம். நாம் இன்று நீண்ட நேரம் நடந்திருக்கிறோம், ஆனால் சாயங்கால வேளையில்தான் அவர் வழக்கமாகச் செய்ததைப் போன்ற காரியங்களைச் செய்தார். இப்போதும் பகல் முடிவடைந்து கொண்டிருக்கிறது; இது சாயங்கால வேளையாகிக்கொண்டிருக்கிறது. மேலும் இயேசு இன்றிரவு நம்மை இங்கே அடைத்து வைத்திருக்கிறார். அவர் தம்மோடு அடைபட்டிருக்க அனுமதிக்கும் பொருளை அவர் கண்டடைய முடிந்தால், அவர் வழக்கமாகச் செய்தது போலவே காரியங்களைச் செய்ய முடியும். ஆமென். நாம் பகுத்தறிவுடன் இருப்போம், ஏனென்றால் இது சாயங்கால வேளை, அவர் இங்கே இருக்கிறார். ஜெபத்தில் ஒரு நிமிடம் அவரிடம் பேசுவோம். 68 எங்கள் பரலோகப் பிதாவே, "சாயங்கால வேளையில் வெளிச்சமுண்டாகும்" என்று தீர்க்கதரிசி சொன்னார். ஒரு காலத்தில், யூத மக்கள் மீது கிழக்கே சூரியன் உதித்து, பரிசுத்த ஆவியானவரைப் பொழிந்தருளியது. பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் நடந்தன; அப்போஸ்தலர்களின் கைகளை நீட்டுவதின் மூலமாக; அவர்கள் தேவனுடைய வல்லமை களைக் கீழே கொண்டு வந்தார்கள்; அவர்கள் வியாதியஸ்தர்களைக் குணமாக்கினார்கள்; அவர்கள் தரிசனங்களைக் கண்டார்கள். இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள். பிறகு சூரியன் மறைந்தது, முழுவதுமாக மறையவில்லை, ஆனால் அது பகலுமல்ல இரவுமல்லாத ஒரு நாளாக இருந்தது. அது தேசங்களைக் கடந்துவிட்டது; இப்போது இங்கே மேற்கத்திய உலகில் இது சாயங்கால வேளையாக இருக்கிறது. அதே சூரியனைப் பிரகாசிக்கச் செய்வேன் என்று நீர் வாக்குத்தத்தம் செய்தீர். தேவனுக்கே துதி உண்டாவதாக, மேகங்கள் விலகிச் செல்கின்றன. பெந்தெ கொஸ்தே நாளில் பொழிந்த அதே சூரியன், அதே முடிவுகள், மீண்டும் வந்திருக்கிறது. ஏனென்றால் சாயங்கால வேளையில் வெளிச்சமுண்டாகும் என்று அவர் சொன்னார். 69 பிதாவே, இன்றிரவு நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன், நாங்கள் வெளியேயுள்ள உலகத்தை மூடிவிட்டு, இயேசு கிறிஸ்துவோடு விசுவாசத்தினால் எங்களை அடைத்துக்கொண்டு, எங்கள் இருதயத்தில் நியாயமாக சிந்தித்து, "அவர் இதைச் சொல்லியிருந்தால், அவர் நித்தியமானவர்; அவர் எங்கும் இருப்பவர், எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமையுள்ளவர், அவர் எல்லாவற்றையும் செய்ய முடியும், ஏனென்றால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார்" என்று விசுவாசிக் கிறோம். மேலும் பிதாவே, இது கற்பனையல்ல என்பதை அவர்கள் காணும்படியாக, இன்றிரவு அவருடைய பிள்ளைகளுக்கு முன்பாக அவர் இங்கே வெளிப்பட நீர் அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், அது தேவனுடைய வார்த்தையினால் விளக்கப் பட்டிருக்கிறது, அதன் முடிவுகள் அது உண்மை என்பதை நிரூபிக்கின்றன. இப்போது, பிதாவே, நாங்கள் நியாயமாக சிந்திப்போம். நட்சத்திரங்களையும் சந்திரன் களையும் உருவாக்கி, அவற்றை அவற்றின் ஆகாயவிரிவில் வைத்து, சூரிய குடும்பம் முழுவதையும் உண்டாக்கி, பூமியைப் படைத்து, இவை அனைத்தையும் செய்த மகத்தான யெகோவாவாகிய தேவனுடைய குமாரனான இயேசு கிறிஸ்து, இன்றிரவு நம்மோடு இங்கே இருந்து, நம்மைத் தம்மிடம் வரும்படி அழைக்கிறார் என்றால், நாம் ஏன் சோர்வடைய வேண்டும். அப்படியானால் நமது தோள்களை நிமிர்த்தி, தேவனை விசுவாசத்தினால் பற்றிக்கொண்டு, இன்றிரவு ஜீவனுள்ள தேவனுடைய குமாரர்களைப் போலவும் குமாரத்திகளைப் போலவும் செயல்படுவோமாக. இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 70 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் சொன்ன நேரத்தைத் தாண்டி உங்களை வைத்திருப்பதற்கு மன்னிக்கவும். ஆனால் இப்போது நாம் பகுத்தறிவுடன் இருப்போம். இயேசு இங்கே இருக்கிறார். அவர் மரித்தோரி லிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார். அவருடைய நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர் எங்கே கூடியிருக்கிறார்களோ, "அவர்கள் நடுவில் நான் இருப்பேன்" என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். அவர் அப்படிச் சொன்னாரா? அப்படியானால் தரிசனங்கள் என்பது கற்பனை யல்ல, அப்படித்தானே? அது உண்மை, அது தேவன்தான். சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. நண்பரே, இது போன்ற காரியங்கள் வெளிப்படுவதை நீங்கள் பார்க்கச் செல்லும்போது, சில சமயங்களில், நான் இதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பேசும் வரை, "தேவன் என்னை அவருடைய தீர்க்கதரிசி யாக்கினார்" என்று நான் ஒருபோதும் சொன்னதை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். நான் பேசுவதை நாடாவில் பதிவு செய்தபோது, தேவ ஆவியின் ஏவுதல் இருந்த நேரத்தில் மக்கள் அதை எடுத்துக் கொண்டதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அது அவர்தான் பேசினார், நானல்ல. பார்த்தீர்களா? நான் உங்களுக்குச் சொல்வதை விட, அவர் உங்களுக்குச் சொல்வது நல்லது. பார்த்தீர்களா? நீங்கள் அவரை அதிகமாக விசுவாசிக்கலாம்; என்னைச் சந்தேகிக்க உங்களுக்கு உரிமை உண்டு. 71 ஆனால் பாருங்கள், நான்-நான் அந்தக் காரியங்களை சற்று தவிர்த்திருக்கிறேன். நான் மக்களிடமிருந்து ஒதுங்கியிருக்கிறேன், ஏனென் றால், "ஓ சகோதரர் பிரான்ஹாம், இது, அது" என்று யாராவது சொல்வதை நான்-நான்-நான் விரும்புவதில்லை. அது-அது-அது-என்னை அதில் ஈடுபடுத்தவே வேண்டாம். பார்த்தீர்களா? இது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து. பார்த்தீர்களா? அவரை மட்டும் பாருங்கள். சிலர் சொல்கிறார்கள், "ஓ, நான்-நான்-நான் எப்படியாவது சென்று-மேடையில் ஏறிவிட்டால், அவர் எனக்காக ஜெபிப்பார்..." அதற்கும் இதற்கும் அதிக சம்பந்தமில்லை. அது என்னைத் தொடுவதல்ல; அது அவரைத் தொடுவது. பார்த்தீர்களா? நீங்கள் உங்கள் விசுவாசத்தை அங்கே வைத்து, அவரைத் தொடுங்கள், உங்கள் இருதயத்திற்குள் ஏதோ ஒன்று இறங்கி வந்து, "ஆம், இப்போது அது முடிந்துவிட்டது" என்று சொல்லவில்லையா என்று உணர்ந்து பாருங்கள். பார்த்தீர்களா? 72 கொஞ்ச நேரத்திற்கு முன்பு இங்கே, நாம் ஒரு கணம் அமைதியாக இருந்தபோது, நான் ஒரு இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தேன், அங்கே மனநலம் குன்றியவர்களுக்கும்-மனநோயாளி வழக்குக ளுக்கும் ஒரு அறை வைத்திருந்தார்கள். நான் அந்த அறைக்குள் சென்றேன்; அதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். சகோதரர்கள் என்னை அங்கே அழைத்துச் சென்ற பிறகு, நான் அறைக்குள் நடந்தேன், அங்கே ஓ, மக்கள் கட்டாயச் சட்டைகளில் (strait jackets) இருந்து கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். 73 சர்வதேச வானொலி ஒலிபரப்பைக் கொண்ட மிகவும் பிரபலமான ஒரு போதகர் அன்று இரவு அங்கே இருந்தார். நான் அவர் பெயரைக் குறிப்பிட மாட்டேன்; அவர் அதை விரும்பாமலும் இருக்கலாம். அவர் இந்த சபையிலிருந்து வேறுபட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவர், அதனால், அவர்-அவர் அந்த இடத்தில் இருந்தார். உள்ளே நடந்தேன், அங்கே ஒரு அழகான இளம் பெண் உட்கார்ந்திருந்தாள், அவள் சொன்னாள், "சகோதரர் பிரான்ஹாம், எப்படி இருக்கிறீர்கள்?" நான் சொன்னேன், "எப்படி இருக்கிறீர்கள்?" நான் சொன்னேன், "நல்லது, நான்..." அவளுடன் அங்கே வயதான ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் கேட்டார், "சகோதரர் பிரான்ஹாம், முதலில் என் மகளுக்கு ஊழியம் செய்வீர்களா?" நான் கேட்டேன், "அவள் யார்?" அவர் சொன்னார், "இவள்தான்." நான் கேட்டேன், "நீங்களா?" நான் கேட்டேன், "இந்த மனநல காப்பக இடத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" அவள் சொன்னாள், "நான் இங்குதான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்." நான் கேட்டேன், "சரி, என்ன பிரச்சனை, சகோதரி?" அவள் சொன்னாள், "அதை நான் அறிய விரும்புகிறேன், சகோதரர் பிரான்ஹாம்." நான் சொன்னேன், "சரி, நீங்கள் என்னைப் பார்க்கும்போது ஒரு மனநோயாளியைப் போல நடந்து கொள்ளவில்லையே." அவள் சொன்னாள், "சரி, நான் என் கதையை உங்களுக்குச் சொல்கிறேன். அது பரவாயில்லையா?" நான் சொன்னேன், "ஆம், அம்மா." அவள் ஒரு அழகான பெண், பார்க்க இருபத்தி மூன்று, இருபத்தி நான்கு வயது மதிக்கத்தக்கவள். எந்த மனிதனின் இருதயத்திற்கும் ஒரு ராணியாக இருக்கக்கூடியவள் போலத் தோன்றினாள், மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் உடைய ணிந்து, சுத்தமாகத் தோற்றமளித்தாள். 74 அவள் என்னிடம் சொன்னாள்; அவள் சொன்னாள், "சரி, சகோதரர் பிரான்ஹாம், நான் ஒரு நல்ல வீட்டில் வளர்க்கப்பட்டேன். இவர்தான் என் தந்தை." அவள் சொன்னாள், "நான் ஒரு கத்தோலிக்கப் பெண்ணாக வளர்க்கப்பட்டேன்." அவள் சொன்னாள், "சரியானதைச் செய்ய எனக்குக் கற்பிக்கப் பட்டது." அவள் சொன்னாள், "ஆனால் நான் ஒரு சிறுமியாக இருந்தபோது," அவள் சொன்னாள், "நான் குடிக்கிற ஒரு பையனுடன் பழகினேன்," மற்றும் சொன்னாள், "நானும் குடிக்கவும், சிகரெட் பிடிக்கவும், இது போன்றவற்றைச் செய்யவும் ஆரம்பித்தேன்." மற்றும் சொன்னாள், "நான் ஒரு தொடர்ச்சியான குடிகாரியாகிவிட்டேன்." வழக்கமாக இங்கே எங்கோ ஒலிப்பதிவு செய்யும் ஒரு சிறிய பெண் இங்கே எங்காவது இருக்கிறாள். அவள் சமீபத்தில் எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். ஒரு சிறிய பெண் அதிலிருந்து குணமாக்கப்பட்டாள், நேராக இங்கே ஹம்மண்டில், அழகான சிறிய நபர்... இப்போது அவள் அங்கே இருக்கிறாள், ஒரு முழுமையான குடிகாரி, நீங்கள் மேலே பைரிக்குச் சென்று, எந்த மருத்துவரிடமாவது ஒரு முழுமையான குடிகாரரை எந்த மருந்தினாலாவது குணப்படுத்த முடியுமா என்று கேளுங்கள். நான்-நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இந்த ஆல்கஹா லிக்ஸ் அனானிமஸ் (Alcoholics Anonymous) எல்லாம் இருக்கிறது. அங்கே செல்லும் பல டஜன் கணக்கானவர்களை நான் அறிவேன், அவர்கள் மீண்டும் வெளியே வருகிறார்கள், ஓரிரு வருடங்களில், அவர்கள் முன்பு போலவே குடிக்கிறார்கள். ஆனால் அங்கே ஒரு பெண் இயேசு கிறிஸ்துவால் முழுமையாக விடுவிக்கப் பட்டாள். அது உண்மைதான். நாம் காரியங் களை நியாயமாகச் சிந்திப்போம். பார்த்தீர்களா? மருத்துவர்களால் செய்ய முடியாததை... மேலும் இது-நான் அவளைப் பற்றிப் பேசுவதை விட்டுவிடுகிறேன்; நான் அன்பான காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன், இப்போது அவள் இங்கே அமர்ந்திருக்கிறாள் (பார்த்தீர்களா?), எனவே... 75 எப்படியிருந்தாலும், இந்த-இந்த இளம் பெண், அவள் சொன்னாள், "நான் குடிக்க ஆரம்பித்தேன், அது என்னை விபச்சாரத்தில் கொண்டுபோய் விட்டது என்று சொன்னாள்." மேலும் அவள் சொன்னாள், "பிறகு நான் குட் ஷெப்பர்ட் இல்லத்திற்கு (Good Shepherd's Home) அனுப்பப்பட்டேன். நான் அங்கே சிறிது காலம் செலவிட்டேன்." மற்றும் சொன்னாள், "நிச்சயமாக நான் அங்கே நன்றாகத்தான் இருந்தேன்." மேலும் சொன்னாள், "நான் மீண்டும் வெளியே வந்தவுடனேயே," சொன்னாள், "அது முழுமையாக வெளியே வரவில்லை, கொஞ்சம்தான்," சொன்னாள், "நான் மீண்டும் குடிக்க ஆரம்பித்தேன், விபச்சாரமும் மீண்டும் தொடங்கிவிட்டது." மேலும் சொன்னாள், "நான் வெறும் குடிகாரிதான், என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை." சொன்னாள், "நான் அனானிமஸ்-க்குச் (குடிபோதை மறுவாழ்வு மையத்திற்கு) சென்று, அதற்கான சிகிச்சையைப் பெற்று, சிறிது காலம் அங்கே தங்கியிருந்தேன்." மேலும் சொன்னாள், "அது எனக்கு ஒரு சிறிதும் நன்மையளிக்கவில்லை. நான் விஸ்கியின் வாசனையை நுகர்ந்ததும், மீண்டும் குடிக்கத் தயாராகிவிட்டேன்." 76 மேலும் அவள் சொன்னாள், "பிறகு அடுத்த காரியம் நடந்தது. எனக்கு இருபத்தி ஒன்று வயதான பிறகு, அவர்கள் என்னை பெண்கள் சிறைக்கு அனுப்பினார்கள், நான் அங்கே ஒரு வருடம் மற்றும் சில மாதங்கள் தண்டனை அனுபவித்தேன் என்று சொன்னாள்." மேலும் சொன்னாள், "நான் மீண்டும் வெளியே வந்தபோது, மீண்டும் குடிக்க ஆரம்பித்தேன்." சொன்னாள், "யாரோ ஒருவர் என்னை சபைகளை மாற்றச் சொன்னார்கள், நான் ஒரு-ஒரு புராட்டஸ்டன்ட் சபையில் கிறிஸ்தவளாக மாற வேண்டும் என்று சொன்னார்கள்." மேலும் அவள் சொன்னாள், "அதை நான் செய்தேன்," அவள் சொன்னாள், "அது எனக்கு ஒரு சிறிதும் நன்மையளிக்கவில்லை." சொன்னாள், "நான் இன்னமும் அதே போலவே குடித்துக் கொண்டிருந்தேன்." அவள் சொன்னாள், "நான் கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன்." சொன்னாள், "அது எனக்கு ஒரு சிறிதும் நன்மையளிக்கவில்லை." அவள்... நான் கேட்டேன், "நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்." நான் சொன்னேன், "சகோதரி, உங்கள் இருதயத்தின் ஆழத்தில், நீங்கள் அதைச் செய்ய ஒருபோதும் விரும்ப வில்லையா?" அவள் சொன்னாள், "இல்லை, ஐயா, நான் ஒருபோதும் விரும்பவில்லை." சொன்னாள்-நான் சொன்னேன், "ஏதோ ஒன்று உங்களை அதற்குத் தூண்டுகிறது." சொன்னாள், "ஆம், ஐயா." நான் சொன்னேன், "அது பிசாசு." அவள் சொன்னாள்... நான் சொன்னேன், "அது பழைய பாணியாக இருக்கலாம், ஆனால் அது பிசாசுதான்." அவள் சொன்னாள், "நான் எப்போதும் அதை நம்புகிறேன், திரு. பிரான்ஹாம்." நான் சொன்னேன்... அவள் சொன்னாள், "உங்கள் சபையில் சேர எனக்கு அறிவுரை கூறுவீர்களா?" நான் சொன்னேன், "சேருவதற்கு என்னிடம் எந்த சபையும் இல்லை." ஆனால் நான் சொன்னேன், "நான் செல்லும் அதே சபைக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." அவள் சொன்னாள், "அதைச் செய்ய நான் மகிழ்ச்சியடைகிறேன்." சொன்னாள், "நான் அதை எப்படிச் செய்வது?" நான் சொன்னேன், "இப்போது, உங்கள் முழங்கால் படியிடுங்கள்." பார்த்தீர்களா? எனவே, அவள் முழங்கால்படியிட்டாள். நான் சொன்னேன், "இப்போது, நீங்கள் தேவனோடு உண்மையாக இருந்து ஜெபியுங்கள்." 77 சரி, அவள் ஜெபிப்பதை நான் கவனித்தேன். அவள் எழுந்தாள், தேவன் அவளுக்கு உதவினால், தான் ஒருபோதும் குடிக்க மாட்டேன் என்று அவள் தேவனிடம் வாக்குக் கொடுத்தாள், எழுந்து நின்றாள், அவள் நடந்து வந்தாள். நான் உட்கார்ந்து அவளைக் கவனித்தேன், என் தலையைக் கீழே குனிந்தபடி இருந்தேன். அவள் நடந்து வந்து என் கைகுலுக்கினாள், அவள் சொன்னாள், "சகோதரர் பிரான்ஹாம், நான் நிச்சயமாக வெளியே சென்று ஒரு தொடக்கத்தை ஏற்படுத்துவேன்." நான் சொன்னேன், "அன்பான சகோதரியே, இது இன்னும் முடிவடையவில்லை; அது உண்மைதான், அது முடிவடையவில்லை." அவள் சொன்னாள், "சரி, என்னால் முடிந்தவரை மிகச் சிறப்பாகச் செய்யப் போகிறேன்." நான் சொன்னேன், "அது சரிதான். ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை." அவள் கேட்டாள், "சரி, நான் என்ன செய்ய வேண்டும்?" நான் சொன்னேன், "நாம் மீண்டும் ஜெபிப்போம்." நாங்கள் அங்கே முழங்கால் படியிட்டோம், அவள் ஜெபிக்க ஆரம்பித்தாள்; அவள் அழத் தொடங்கினாள். நான் அவள் மீது என் கைகளை வைத்து, நான் சொன்னேன், "அன்பான தேவனே, இந்த ஏழை மனுஷி இங்கே, இந்தப் பிசாசினாலும, இந்தச் சூழ்நிலைகளாலும் கட்டப்பட்டிருக்கிறாள். அவள் எங்கே இருக்கிறாள் என்று பாருங்கள்; அவள் அதைச் செய்ய விரும்பவில்லை. சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா." 78 சில நிமிடங்களில், அவள் எழுந்தாள், ஜெபித்துக்கொண்டே இருந்தாள்; அதற்குப் பிறகு சுமார் இரண்டு நிமிடங்களில் அவள் திடீரென்று நிறுத்திவிட்டு, நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அந்தப் பெரிய கரிய கண்கள், கண்ணீர் கீழே வழிந்தோடியபடி, அவள் சொன்னாள், "சகோதரர் பிரான்ஹாம், ஏதோ நடந்துவிட்டது." அவள் சொன்னாள்... நான் சொன்னேன், "இப்போது, இது முடிந்துவிட்டது, சகோதரி, இப்போது, இது முடிந்துவிட்டது." சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அவளைத் தெருவில் சந்தித்தேன். அவள்-நான் என் சொந்த ஊரில் மின்சாரக் கட்டணம் செலுத்தச் சென்றுகொண்டிருந்தேன், இந்தப் பெண் என்னைப் பார்த்துக் கத்தினாள். அவள் சொன்னாள், "சகோதரர் பிரான்ஹாம்." சொன்னாள், "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று விசாரிக்க முயற்சித்தேன்." சொன்னாள், "இவர்தான் என் கணவர்; இது என் குழந்தை." சொன்னாள், "அன்றிலிருந்து நான் ஒருபோதும் விஸ்கிக்காக ஏங்கியதில்லை. நான் விடுவிக்கப்பட்டேன்." 79 பாருங்கள் நண்பர்களே, இது புத்திசாலித்தனம் அல்ல; அது இங்கிருந்து (இருதயத்தின் ஆழத்திலிருந்து) வர வேண்டும். அது உண்மைதான். இங்கே ஏதோ நடக்க வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு அது அங்கே நடக்கட்டும். இங்கே இருக்கும் சத்தியமும் ஜீவனுமுள்ள தேவன், உங்கள் மனதிலிருந்து வெளியேறி உங்கள் இருதயத்திற்குள் செல்வாராக. சொல்லுங்கள், "ஓ, இயேசுவே, ஆம், இது நியாயமானது. நீர் இங்கே இருந்தால், மற்றவர்களைக் குணமாக்க முடியும் என்றால், என்னையும் குணமாக்க உம்மால் முடியும், நான் இப்போது அதை ஏற்றுக்கொள்கிறேன்." சிறிது நேரம் கழித்து ஏதோ ஒன்று அங்கே நிலைநிறுத்தப்படும் வரை அதை உங்கள் இருதயத்தில் சொல்லிக்கொண்டே இருங்கள், அந்தச் சட்டை வெள்ளையாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரிந்திருப்பது போலவே, நீங்கள் குணமாக்கப்பட்டுவிட்டீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்படி யானால் அது முடிந்துவிட்டது. அது உண்மைதான். நீங்கள் எழுந்து உங்கள் அருகில் உள்ளவரிடம், "ஏதோ நடந்துவிட்டது" என்று சொல்வீர்கள். ஆம், ஐயா. அது முடிந்துவிடும். அது உண்மைதான். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 80 பில்லி பால், நீ எங்கே இருக்கிறாய்? எப்போதும் என் பின்னால் நிற்காதே; என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை. என்ன... கே (K), சரி, நாம் நம்பர் 1-லிருந்து தொடங்குவோம், கே (K), நம்பர் 1. நாம் சிலரை எழுந்து நிற்கச் செய்வோம். கே (K), நம்பர் 1 யாரிடம் இருக்கிறது, உங்கள் கையை உயர்த்துங்கள்? நீங்கள் கே (K) என்று சொன்னீர்களா? [ஒலி நாடாவில் காலியிடம்] 81 கர்த்தர் இப்போது தமது ஆசீர்வா தங்களைக் கூட்டுவாராக. இப்போது, நாம் ஒரு... இப்படி தாமதமானதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஒருவேளை நாளை இரவு, நான் கீழே வந்து, மக்களை வரிசைப்படுத்துவேன். இப்போது, ஜெப அட்டைகளை வைத்திருப் பவர்கள், அவற்றை வைத்துக்கொள்ளுங்கள், ஏனென்றால் எப்படியும் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். புரிகிறதா? தேவன் சித்தமானால், உங்களை நேராக இங்கே கொண்டுவந்து உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். மேலும் நான் அவரிடம் கேட்கிறபடி, கர்த்தர் வேறு ஏதேனும் வழியில் ஆசீர்வதிப்பாரா என்று நான் பார்க்கப் போகிறேன். நண்பர்களே, நீங்கள் எனக்காக ஜெபிப்பீர்கள் அல்லவா? புரிகிறதா? ஓ, நான் இதில் வெளியே வர முடிந்தால், நான் எப்படி உணருவேன்... பாருங்கள், இப்போது அது அந்த அழுத்தமாக இருக்கிறது. இப்போது, ஒரு நோயாளி இங்கே நின்று, கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் இருந்தால், மக்கள், "உஹ்-ஹுஹ், நான்-நான் அவருக்கு அந்த காரியங்கள் தெரியும் என்று நினைத்தேன். கிறிஸ்து அவருக்குச் சொன்னார் என்று நினைத்தேன்" என்று சொன்னால் என்ன செய்வது? பாருங்கள்? இதோ இருக்கிறது. 82 இப்போது, உங்களில் எத்தனை பேர் இன்றிரவு சுகமாக வேண்டும் என்று விரும்புகிறீர்கள், உங்கள் கைகளை உயர்த் துங்கள்? பார்ப்போம்-பார்ப்போம், மேடைக்கு அழைக்கப்படாதவர்கள். சரி, நீங்கள் இந்த வழியே பார்த்து விசுவாசியுங்கள். விசுவாசம் வையுங்கள். உங்களில் எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் இல்லை என்று நான் சொல்ல வந்தேன்? இப்போது நீங்கள் உங்கள் கைகளை உயர்த்துவதைப் பார்ப்போம். இப்போது, ஜெப அட்டை இல்லாமல் நான் உங்களை அழைத்தால், ஒருவேளை நீங்கள்-நீங்கள் ஜெப அட்டை வைத்திருந்தால் நீங்கள் எப்படியும் மேடைக்கு வருவீர்கள். பதிலளிப்பவர்கள், ஜெப அட்டை இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிச்சயமாக நான்-நான் இங்கே சொல்ல முடியாது; கர்த்தருடைய தூதன் என்னை வழிநடத்துகிற அல்லது என்னைக் கொண்டுசெல்லுகிற வழியை நான் பின்பற்ற வேண்டும். பின்பு நான் அதையே பின்பற்றுகிறேன். மேலும் இப்போது, உங்கள் விசுவாசமே அதைச் செய்கிறது. இப்போது, உங்கள் கால்விரல்களில் நின்று, எட்டிப்பார்ப்பதன் மூலம், நான் சொல்வது உங்களில் எத்தனை பேருக்குப் புரிகிறது. இப்போது, இந்த நபர் இங்கே நின்று, "சரி-சரி இந்த நபருக்கு என்ன குறை?" என்று சொல்வதைப் போல. நான் அவர்களிடம் ஒரு கணம் பேசுகிறேன்; அதைச் செய்வதற்கு என்னிடம் ஒரு வழி இருக்கிறது. நிச்சயமாக அது எனக்கும் தேவனுக்கும் இடைப்பட்டதாகும். பாருங்கள்? பின்பு, நான்-நான் பரிசுத்த ஆவியானவரை சந்திக்கச் செல்கிறேன், என்னை அவருக்கு முழுமையாக அர்ப்பணிக்கிறேன், அவர் என்ன சொல்கிறார் என்று கவனிக்கிறேன். அந்த நபரின் ஆவி அசைவதை நான் உணர்கிறேன். நான் பார்க்கிறேன், ஒருவேளை அது ஒரு-அது ஒரு விசுவாசியாக இருக்கலாம், என்றால் எல்லாம் சரியாக இருக்கும். நான் அந்த நபரிடம் பேச முடியும், ஏனென்றால் அவர்கள் ஒரு விசுவாசி. 83 யாராவது குறைவாய் இருக்கிறார்களா, சகோதரர் வுட்? உங்களால் முடியாது-இல்லை-ஓ, எல்லாம்-எல்லாம் சரி. பின்பு நீங்கள்... பின்பு பாருங்கள், பின்பு நான் முன்னே றுகிறேன், அது அப்படித்தான், அழுத்தம். பாருங்கள்? நான் உள்ளே செல்கிறேன். இப்போது, அதற்கு ஒரு-ஒரு-ஒரு-ஒரு புற்று நோய் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆச்சரியமே, அது என்னை விட்டு விலகும்போது, நான்-அந்தக் கணத்திலேயே, அது இரண்டு மணிநேரம் பிரசங்கம் செய்வதை விட மோசமாக இருக்கிறது. பாருங்கள்? ஒருவேளை, அது அதைச் செய்யாமல் போகலாம். நான் திரும்ப நோயாளியைப் பார்க்கிறேன், அவர்கள்-அவர்கள்-அவர்கள் இங்கே மேலே இருக்க வேண்டிய நேரத்தில், இன்னும் கீழே இருக்கிறார்கள். பாருங்கள், அது செய்கிற ஒரே காரியம், விசுவாசத்தைக் கொண்டுவருவதுதான். எவரும் சுகமடையக் கூடிய ஒரே வழி... தெய்வீக சுகம் என்பது விசுவாசத்தினால்தான். அது சரியா? நீங்கள் இரட்சிக்கப்படக் கூடிய ஒரே வழி விசுவாசத்தினால்தான், சென்று ஏதோ ஒன்றைச் செய்வதினால் அல்ல; நீங்கள் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், கிரியைகளினால் அல்ல, விசுவாசத்தினால். பாருங்கள்? 84 மேலும் இப்போது, இங்கே ஒரு நபர் நிற்கிறார், ஒருவேளை புற்றுநோய் இருக்கலாம். மேலும் நான்-நான் பார்ப்பேன். அவர்கள் சொல்வார்கள், "இப்போது, அவருக்கு என்னைத் தெரியாது என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் அவரைப் பார்த்ததே இல்லை." சரி, கர்த்தர் சொல்வார், "அந்த நபருக்கு புற்றுநோய் இருக்கிறது." சரி, அது அவர்களை கொஞ்சம் அசைக்கலாம், ஆனால் அது இன்னும் அதைச் செய்யவில்லை. பின்பு நேரடியாக, நீங்கள் இன்னொன்றைத் தாக்குகிறீர்கள், மேலும் "சரி, அதற்கு இருக்கிறது-உங்களுக்கு இன்னின்னது இருக்கிறது" என்று சொல்கிறீர்கள். சரி, அது எழுப்பலாம், "சரி, ஆம் அது... அவர்-அவர் சரியாகத்தான் இருக்க வேண்டும்." பாருங்கள்? பின்பு, அவர்கள் உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளும் இடத்திற்கு அவர்களைக் கொண்டுவர, அந்த ஒருவருடன் நீங்கள் நீண்ட நேரம் தங்கியிருக்கும் போது... இப்போது, அவர்கள் சுகமாகிவிட்டார்கள் என்று அதற்கு அர்த்தமல்ல. அதற்கு அர்த்தம், அவர்கள் மேல் உள்ள அந்த உயிர் மரித்துவிட்டது, போய்விட்டது-புற்றுநோயில் உள்ள அந்த-அந்த உயிர் வெளியேறிவிட்டது. நீங்கள் கீழே செல்லும் நேரத்தில், அது மீண்டும் வரலாம். 85 ஆனால் அங்கே அந்த டேப்களிலும், இங்கேயும் அது நகர்வதை நீங்கள் கேட்கும் போது, ஏனென்றால் நாங்கள்-ரெக்கார்டர்களைப் பாருங்கள். சொல்லப்படுவதை எல்லாம் நாங்கள் கேட்கிறோம். பாருங்கள்? மேலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்று அது சொல்வதை நீங்கள் கேட்கும்போது, ஒரு தரிசனம் பின்னால் நகர்கிறது; அது நான் அல்ல. நான் அதற்குள் செல்வதில்லை; அவர்தாமே என்னை அதற்குள் அழைத்துச் செல்கிறார். மேலும் ஒரு தரிசனம் திரும்பி வருகிறது, அப்படி வரும்போது, அவர் செய்யச் சொன்னதை நான் வரிசையில் வெகு தூரத்தில் பார்க்கிறேன். பின்பு அது அவர்களுக்கு அதைப்பற்றிச் சொல்கிறது. சரி, இப்போது இங்கே, அது அவர்களை விட்டு இப்போதே நீங்கிவிட்டது, அவர்கள் தொடர்ந்து அப்படி உணர்ந்தால், நன்றாகவும், அற்புதமாகவும் உணர்ந்து செல்கிறார்கள்... என் வாழ்க்கையில் இதுவரை ஒரு நபருக்காக நான் ஜெபித்ததில்லை, அதைப்பற்றி நான் உண்மை யாகவே மனப்பூர்வமாக இருந்திருக்கிறேன், ஆனால் அப்போது ஏதோ ஒன்று நடந்தது. இப்போது, அதைச் சிந்தித்துப் பாருங்கள். என் வாழ்க்கையில் நான் ஒருபோதும் தேவனிடம் உண்மையாக ஒன்றைக் கேட்டதில்லை... நான் இப்போது இருபத்தி மூன்று ஆண்டுகளாகப் பிரசங்கித்து வருகிறேன், மேலும் என் வாழ்க்கையில் நான் தேவனிடம் எதையுமே கேட்டதில்லை, அவர் எனக்குக் கொடுக்காததை, அல்லது ஏன் அவரால் எனக்குக் கொடுக்க முடியாது என்பதை எனக்குச் சொல்லாததை. அது சரி. அவர் தேவன். அல்லேலூயா! 86 என்னே, நான் அவரை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். நான்-நான் உங்கள் சிலருக்கு ஒரு வெறியனாகத் தோன்றலாம் என்பது போல எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சில சமயங்களில் ஏதோ ஒன்று என் இதயத்தைத் தாக்குவது போல் இருக்கிறது, நான் அவரை நினைக்கும்போது, அது என்னிலிருந்து பெருகுவது போல் தோன்றுகிறது. இதோ அவர் இருக்கிறார். அவர் இங்கேயே இருக்கிறார். அந்த தேவ தூதன், நான் இப்போது இருக்கும் இடத்திலிருந்து இரண்டு அடி தூரத்தில் கூட இல்லாமல், இங்கேயே நிற்கிறார். நீங்கள் உணர மட்டும் முடிந்தால். எப்பொழுதும் என் வலதுபுறத்தில். நீங்கள் பார்க்கும்படி, நேற்று இரவு, அந்தப் படங்களை வைக்க நான் மறந்துவிட்டேன். அது எப்படி-படத்தில் வலதுபுறத்தில் வருகிறது, வலதுபுறத்தில் வெளியே செல்கிறது. பாருங்கள்? 87 இப்போது, கர்த்தர் உங்களுக்கு கிருபையாக இருப்பாராக. இப்போது, நான் அவசரப் பட்டு, அதற்காக மட்டும் ஜெபிப் பேன்... இப்போது, நான் உங்களிடம் ஒன்றைக் கேட்பேன், என் அன்பான சகோதரனே சகோதரியே... மேலும் சகோதரர் வுட், மேலும் இங்கே உதவி செய்யும் நீங்கள் அனைவரும், அல்லது பில்லி எங்கே, அது எங்கிருந்தாலும், நீங்கள்... சகோதரர் போஸ், நீங்கள் கவனியுங்கள், என்னை-என்னை அதிக நேரம் தங்கியிருக்க விடாதீர்கள் (பாருங்கள்?), ஏனென்றால் நான் இந்த வாரத்தை முடிக்க விரும்புகிறேன். மேலும் இப்போது, நீங்கள் சில நிமிடங்கள் அமைதியாக இருங்கள். எனக்காக அதைச் செய்வீர்களா? அமைதியாக இருங்கள், பயபக்தியாக இருந்து ஜெபியுங்கள். எனக்காக ஜெபியுங்கள், நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன். சில நிமிடங்களில் நாங்கள் உங்களை வெளியே அனுப்புவோம். சரி, பில்லி பால் எங்கே-எங்கே போனான்? என்ன சொன்னீர்கள்? ஓ, இது சகோதரர் வுட், ஆம், சரி. நான்... மக்கள்... ஒரு மேடையில் நியாயங்காட்டுதல், எனக்கு பில்லியின் ஆவி தெரியும். அவனிடம் தவறாக இருப்பதெல்லாம் எனக்குத் தெரியும். மேலும் அபிஷேகம் என்னைத் தாக்கும்போது, காரியங்கள் என்னிடம் வருவதை நான் உணர முடியும், மேலும் நான்-நான்-நான் பில்லி எங்கிருக்கிறான் என்பதை உணருகிறேன். பாருங்கள்? மேலும் நான்-நான் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 88 அவன் என்னோடு இருந்திருக்கிறான்; நான் அவனை என் கையில் சுமந்தேன், எனக்கு-அம்மா இல்லாதபோது அவனது பாட்டிலை நான் இங்கே வைத்திருந்தேன், உங்களுக்குத் தெரியும். மேலும் நான் தாயாகவும் தந்தையாகவும் இருக்க வேண்டியிருந்தது. இரவு முழுவதும் நெருப்பை வைத்திருக்க எங்களால் இயலவில்லை. அவனது சிறிய பாட்டிலை நான் எப்படி சூடாக வைத்திருந்தேன் தெரியுமா? நான் அதை என் தலையணைக்கு அடியில், என் தலைக்கு அடியில் வைத்து, சூடாக வைத்தி ருப்பேன். பின்பு அவன் இரவில் எழுந்தி ருக்கும்போது, அவனது தாய் இறந்துவிட்டாள், உங்களுக்குத் தெரியும், நான் அவனது சிறியதை கொடுப்பேன்-ஒரு கோக் பாட்டிலை, அதன் மேல் ஒரு சிறிய-சிறிய நிப்பிளைக் கொண்டி ருந்தது, அதனால் அவன் இரவில் பால் குடிக்க முடியும். ஓ, நாங்கள் ஒரு கடினமான நேரத்தைக் கொண்டிருந்தோம், ஆனால் நாங்கள் ஒன்றாக இணைந்திருந்தோம், தேவன் எங்களுக்கு நல்லவராக இருந்திருக்கிறார். அவன் ஒரு ஊழியக்காரனாவான் என்று நான் நம்புகிறேன். 89 சரி, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. இப்போது, சகோதரி, நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படியா? நீங்கள் ஆங்கிலம் பேச மாட்டீர்களா? ஓ, நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்கள், சரி. அது நல்லது. நீங்கள் ஆங்கிலம் பேச முடிந்தால் சரி. இப்போது, நான்-நான் உங்களிடம் பேச விரும்புகிறேன், ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மட்டும். மேலும் எனக்கு உங்களைத் தெரியாது. ஆனாலும், இயேசுவுக்கு உங்களைத் தெரியும். ஒருவேளை நீங்கள்... நீங்கள் ஸ்வீடனில் பிறந்தீர்களா? ஓ, அப்படியானால் நாம் பல மைல்கள் தொலைவில் பிறந்திருக்கிறோம், இல்லையா? சரி, நான் உங்களுக்குச் சொல்வேன்; நீங்கள் ஒரு நல்ல நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்கள், மிகவும் நல்ல நாடு, ஸ்வீடன். உங்களுக்கு சகோதரர் பெத்ரூஸை, சகோதரர் லூயி பெத்ரூஸைத் தெரியுமா? அவர் ஒரு நல்ல மனிதர், இல்லையா? நான் அவரை நேசிக்கிறேன்; அவர் மிகவும் அன்பான மனிதர், அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர். இப்போது, நான் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களிடம் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும், அப்படித்தானே? நான் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களிடம் பேசுகிறேன் என்று சொல்கிறேன். ஏனென்றால் நான் உங்களை அமைதியாக்குகிறேன். பாருங்கள்? நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் நீங்கள்-நீங்கள் இப்போதே கொஞ்சம் பதட்டமாக, கலக்கமாக இருக்கிறீர்கள். அதனால்தான்-அதனால்தான் நான் உங்களிடம் இப்படிப் பேசிக் கொண்டி ருக்கிறேன். நீங்கள் அமைதியாகவும் சாந்த மாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதனால் இங்கே இருப்பதன் பலனை நீங்கள் பெற முடியும். பாருங்கள்? 90 மேலும் இப்போது, உங்களைப் பற்றி ஏதும் தெரியாமல், இதுதான் வாழ்வில் நமது முதல் சந்திப்பாக இருக்கும்போது, இயேசு என்னிடம், நீங்கள் அவரிடம் என்ன கேட்பதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால்... நீங்கள் வந்திருப்பது, சகோதரர் பிரான்ஹாமைப் பார்ப்பதற்காக அல்ல; கர்த்தராகிய இயேசுவைப் பார்ப்பதற்காகவே வந்திருக்கிறீர்கள். மேலும் இப்போது, நீங்கள்-நான் இந்த மைக்ரோஃபோனைப் போன்றவன் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். பாருங்கள்? ஏதோ ஒன்று இதன் மூலம் பேசினாலொழிய இந்த மைக்ரோஃபோனால் பேச முடியாது. பாருங்கள்? இது வெறும் ஒரு உலோகத் துண்டு. இது எதிரொலிப்பதற்கு முன்பு, முதலில் அதைத் தாக்க இங்கே ஒரு சத்தம் இருக்க வேண்டும் (பாருங்கள்?), அது வெளியே கொண்டு செல்வதற்கு முன்பு. இப்போது, நான் அப்படித்தான் இருக்கிறேன். நான் மைக்ரோஃபோனைப் போன்றவன். பாருங்கள்? இப்போது, இங்கே பின்னால் ஏதோ ஒரு உண்மையான அறிவு இருக்க வேண்டும், உங்களை அறிந்த, உங்களைப் பற்றிய அனைத்தையும் அறிந்த, நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதை அறிந்த ஏதோ ஒன்று, அதைச் சொல்வதற்காக இந்த உதடுகளின் மூலம் பேசுவதற்கு இருக்க வேண்டும். அது சரியல்லவா? இப்போது, பார்வையாளர்கள் அதை விசுவாசிக்கிறார்கள், இல்லையா பார்வையாளர்களே? பாருங்கள்? ஏனென்றால் நமக்கு ஒருவரையொருவர் தெரியாது, ஆனால் அவர் என்னிடம் சொல்ல முடியும். அப்போது நீங்கள் அவரை விசுவாசிக்கிறீர்கள். 91 நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக வந்திருக்கும் ஒரு காரியம், உங்கள் கண்கள், உங்கள் கண்கள் தான் என்னவென்றால்... நிச்சயமாக நீங்கள் கண்ணாடிகள் மற்றும் பலவற்றை அணிந்திருக்கிறீர்கள், ஏனென்றால் உங்கள்-உங்கள் கண்கள் நன்றாக இல்லை. மேலும் நான் உங்களை உங்கள் வீட்டிலும் மற்றபடி பார்க்கிறேன், அது உங்கள் வீட்டில் ஏன் உங்களை இவ்வளவு தொந்தரவு செய்கிறது என்று. பிறகு உங்களிடம் வேறு ஏதோ தவறு இருக்கிறது, அது என்னவென்றால், அது உங்கள் வயிற்றில் இருக்கிறது. உங்களுக்கு வயிற்றுப் பிரச்சனை இருக்கிறது, அது மிகவும் மோசமாக இருக்கிறது. உங்களுக்கு வயிற்றில் ஒரு-ஒரு கசிவு இருக்கிறது. மேலும் அது ஒரு-அங்கே ஒரு வளர்ச்சி இருக்கிறது, உங்கள் வயிற்றில் ஏதோ ஒரு வகையான வளர்ச்சி இருக்கிறது. மேலும் இப்போது, நான் உங்களை ஒரு-நீங்கள் இங்கிருந்து வந்தவர் அல்ல; நீங்கள் வேறு எங்கிருந்தோ வந்திருக்கிறீர்கள். நீங்கள்... ஆம், அது ஒரு கோதுமை நாடு, மின்ன சோட்டாவில். நீங்கள் ஜெபிக்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். அது சரி. இப்போது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பிறகு நீங்கள் மின்னசோட்டாவிற்குத் திரும்பிச் சென்று சுகமாக இருக்கலாம். இயேசு கிறிஸ்துவே, என் சகோதரியான இவரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சுகமாக்குவீராக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 92 நாம் வந்து நியாயங்காட்டுவோம். சரி. சகோதரி, நீங்கள் வரும்போது, தேவன் மேல் விசுவாசம் வையுங்கள். என் வாழ்க்கையில் நான் உங்களை ஒருபோதும் பார்த்ததில்லை, எனக்குத் தெரிந்தவரை உங்களை ஒருபோதும் அறிந்த தில்லை. ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு, நம் இருவரையும் தெரியும், இல்லையா? ஏதோ ஒன்று இங்கே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்தி ருக்கிறீர்கள், இல்லையா? அது சரி என்றால், நீங்கள் ஒரு உணர்வைக் கொண்டிருந்தால், அதைக் குறித்து ஏதோ மிகவும் இனிமையானது போல், மக்கள் பார்க்கும்படி உங்கள் கையை உயர்த்துவீர்களா? அது சரி. இந்தப் படத்தில் நீங்கள் பார்க்கும் அந்த வெளிச்சம் அதுதான். அது கர்த்தராகிய இயேசு. இப்போது, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள். உங்களைப் பார்ப்பதற்கு, நீங்கள் மிகவும் ஆரோக்கியமான பெண்ணைப் போலத் தோன்றுகிறீர்கள். ஆனால் நீங்கள் என்னை விட்டு விலகிச் செல்வதை நான் பார்க்கிறேன். மேலும் ஏதோ ஒன்று நடப்பதை நான் பார்க்கிறேன்; அது உங்கள் விலா எலும்புகளுக்கு நேர் கீழே, உங்கள் வலது பக்கத்தில் இருக்கிறது. அது ஒரு-அது ஒரு பித்தப்பை, ஒரு பித்தப்பை பிரச்சனை. மேலும் நான் பார்க்கிறேன்-அங்கே அது காட்டுகிறது உங்கள்-உங்கள்-உங்கள்-உங்கள் கல்லீரல், எல்லாம்-உங்கள் கல்லீரலில் ஒரு-ஒரு வளர்ச்சி இருக்கிறது, அது வெளியே தள்ளுகிறது, ஒரு-ஒரு தள்ளும் இடத்தை உருவாக்குகிறது. மேலும் நீங்கள் ஒரு தீவிரமான நிலையில் இருக்கிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் உரைக்கிறதாவது. அது உண்மை. நீங்கள் இப்போது விசுவாசிக் கிறீர்களா? 93 அன்பான பரலோகப் பிதாவே, இந்தப் பெண் மரண இருளின் நிழல்களில் நடந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து, ஆனால் இப்போது ஜீவன் மற்றும் வெளிச்சத்தின் நிழலில் நிற்கிறாள். ஓ தேவனே, இருள் பின்வாங்கப்பட்டு, வெளிச்சம் உள்ளே பிரகாசிப்பதாக. மேலும் அவள் வாழ்வாளாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்போது, விசுவாசித்து, மகிழ்ச்சியடைந்து செல்லுங்கள். உங்களது பிரச்சனை, உங்களை மிகவும் பதட்டமடையச் செய்திருக்கிறது, எனவே இப்போது கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியாகச் செல்லுங்கள், நீங்கள் சுகமடைவீர்கள். ஆமென். 94 நமது கர்த்தராகிய இயேசுவாகிய தேவனுக்குத் துதி உண்டாவதாக. அவர்-அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்; அவர் என்றென்றைக்கும் ஜீவிக்கிறார். அவர் ஒரு போதும் தவறமாட்டார். அவர் சர்வஞானி, சர்வவியாபி, சர்வவல்லவர். ஓ, அவர் எல்லாம். நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன். அவர் எவ்வளவு அற்புதமானவர். "நீ விசுவாசிக்கக் கூடுமானால்" என்று போதகர் சொன்னார், "எல்லாமே சாத்தியம்." சகோதரி டவுனிங், நான்-நான் இப்போது உங்களிடம் பேச விரும்புகிறேன், ஏனென்றால் அங்கே அமர்ந்திருக்கும் உங்களை எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அங்கே உங்கள் தாயாரைப் பற்றி படித்துக் கொண்டிருக்கிறீர்கள். பாருங்கள்? எனவே நீங்கள் அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அப்போது அதைப் பிடித்துக்கொண்டேன். ஆனால் இப்போது பயப்பட வேண்டாம்; எல்லாம் சரியாகப் போகிறது என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? நான்-எனக்கு உங்களைத் தெரியும், அதனால் தான் நீங்கள் தோன்றுவதைக் கண்டேன், உங்கள் தாயாரைக் கண்டேன், நீங்கள் வருவதைக் கண்டேன். அதனால் நான்-தரிசனத்தில் அதை நான் அடையாளங்கண்டு கொண்டேன்; அது நீங்கள்தான். 95 இந்தப் பக்கத்திலிருந்து வேறொருவர் இழுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அது-அது மார்பிலும் பக்கவாட்டிலுமாக இரண்டிலும் இருந்தது. அங்கே முனையில் அமர்ந்திருக்கும், பித்தப்பை பிரச்சனையுடன் இங்கே அமர்ந்திருக்கும் இந்தப் பெண்தான். மேலும் அவள் விசுவாசித்தால்... ஆம், அம்மா, அது நீங்கள்தான். அது சரி. ஒரு கணம் உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். இப்போது, அங்கே முனையில் உள்ள அம்மா, சென்று சுகமடையுங்கள். தேவன் உங்களையும் ஆசீர் வதிப்பாராக, சகோதரி, உங்களுக்கும் பித்தப்பை பிரச்சனை இருந்திருந்தால், நீங்களும் அதை விசுவாசியுங்கள். அங்கே ஒரு பெண் இருக்கிறார் நான் தரிசனத்தைக் கண்டேன், சரியாக அங்கே, அவள் கோட் அணிந்திருந்தாள். மேலும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. நாம் அவரை நேசிக்கிறோமா இல்லையா? நமது கர்த்தராகிய இயேசு எவ்வளவு அற்புதமானவர். அவர் மிகவும் உண்மை யானவர். இப்போது, அது அவர்தான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தால். பாருங்கள்? அது சர்வவல்லமையுள்ள தேவன். 96 நான் ஒரு பெண்ணைப் பார்க்கிறேன். நான் அவளை ஒரு நிமிடம் பார்க்கப் போகிறேன், ஏனென்றால் அவள் தன் தலையைத் தாழ்த்தியிருக்கிறாள்; அவளது கண்கள் மூடியிருக்கின்றன. அவளிடம் சிவப்பு நிறத்திலான உடை, அல்லது பாக்கெட் புக், அல்லது ஏதோ ஒன்று இருக்கிறது. அவள் நரைத்த முடியைக் கொண்டிருக்கிறாள். அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள்; அவள் இங்கேயே வரிசையில் அமர்ந்திருக்கிறாள். கர்த்தராகிய இயேசுவைத் தொடர்புகொள்ள அவள் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறாள், ஏனென்றால் இந்த மேடைக்கு தன்னால் வர முடியாது என்பது அவளுக்குத் தெரியும். சகோதரி, என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இங்கேயே அமர்ந்து, மிகவும் கடினமாக ஜெபித்துக் கொண்டிருக்கும் நரைத்த முடியைக் கொண்ட அம்மா. நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் இருதயப் பிரச்சனையிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா, தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சரி, இப்போது உங்களைச் சுற்றி எல்லாம் வெளிச்சமாக மாறுகிறது. அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்டார் என்று நான் நம்புகிறேன். இப்போது, செல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 97 ஓ, நீங்கள் அவரை விசுவாசிக்க முடிந்தால், அவர் மிகவும் உண்மையானவர். ஓ, எவ்வளவு அற்புதம். சகோதரி, அந்த நரம்புப் பிரச்சனையிலிருந்து நீங்கள் சுகமடைந்தீர்கள், நான் அங்கே நின்றுகொண்டிருந்தபோது சிறிது நேரத்திற்கு முன்பு எல்லாம் உங்களை விட்டு விலகிவிட்டது, எனவே நீங்கள்-நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள், "அன்பான கர்த்தருக்கு நன்றி" என்று சொல்லி, மகிழ்ச்சியடைந்து, சுகமாகச் செல்லுங்கள். ஆமென். "தேவனுக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோம். நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன், அவர் மிகவும் உண்மையானவர். சரி, நோயாளி. எப்படி இருக்கிறீர்கள், சகோதரி? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்களும் விசுவாசிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் அந்நியர் களா? சரி. நாம்-நான் இப்போது உங்களை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்பதை அறிந்துகொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அப்படியானால் உங்க ளுக்கு என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியாது. அது உங்களுக்குத் தெரியும். எனக்கு எந்த யோசனையும் இல்லை, ஆனால் தேவனுக்குத் தெரியும். நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரியும், அவரால்-அவரால் என்னிடம் சொல்ல முடியும். அவர் என்னிடம் சொன்னால், அப்போது நீங்கள் விசுவாசிப்பீர்களா? 98 விசுவாசம் வையுங்கள் மற்றும் உண்மையாகவே பயபக்தியாக இருங்கள், இப்போது சில நிமிடங்கள் மட்டும். சந்தேகப் பட வேண்டாம், எல்லா வகையான விசுவாசத் தையும் கொண்டிருங்கள். அம்மா, சற்று முன்பு உங்கள் கையை உயர்த்திய நீங்கள், உங்களுக்கு அருகில் இந்தப் பெண் சுகமடைந்தபோது, அங்கே சுகமடைவதில் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தீர்கள். பாருங்கள்? நீங்கள் இருந்தீர்கள். உஹ்-ஹுஹ். ஏனென்றால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது, அதிலிருந்து விடுபட நீங்கள் மிகவும் விரும்பினீர்கள். பாருங்கள்? அது சரி. ஆனால் நான்-அது இப்போது முடிந்துவிட்டது என்று நான் நம்புகிறேன்; நான் அந்த மக்களிடம் சொல்வதற்கு முன்பு நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆமென். தேவன் மேல் விசுவாசம் வையுங்கள். அது சரி. அங்கே வெளியே உட்கார்ந்திருக்கும் சிறிய அம்மா, அழுதுகொண்டிருக்கிற, சற்று தடியான, இப்போது என்னைப் பார்த்துக் கொண்டி ருக்கிறாள். கர்த்தருடைய தூதன் அவளுக்கு மேல் நிற்கிறார். பார்வையாளர்களே, அதை உங்களால் பார்க்க முடியவில்லையா? பாருங்கள் இங்கேயே நிற்கிறது. அந்த வெளிச்சத்தை உங்களால் பார்க்க முடியவில்லையா, சரியாக-இங்கேயே தொங்கிக்கொண்டிருக்கிறது? இப்போது, அங்கே இருக்கும் பெண், அவளை என்னால் சுகமாக்க முடியாது, ஆனால் அவளுக்கு ஒரு பித்தப்பை பிரச்சனை இருக்கிறது, அதிலிருந்து-அதிலிருந்து அவள் சுகமடைய விரும்புகிறாள். அது சரிதான், இல்லையா? மேலும் நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் சுகமடைய முடியும். எல்லாம் சரி, ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 99 அங்கிருந்து உங்களுக்கு நேர் எதிரே அமர்ந்திருக்கும் நபர், தமனிகள் கடினமடையும் பிரச்சனையுடன், அவரும் சுகமடைய விரும்புகிறார். தேவன் தன்னைச் சுகமாக்குவார் என்று அவர்-அவர் நினைக்கிறார், இல்லையா, ஐயா? அப்போது அவர் அதைச் செய்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் அந்தப் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவள் தனது சுகத்தைத் தவறவிட்டாள், அது உங்களிடம் சென்றது, சரியாக அப்போது இறையாண்மை கிருபையில், அது உங்களிடம் சென்றபோது, ஒரு உண்மையான விசித்திரமான உணர்வு அப்போது உங்களைத் தழுவியது, இல்லையா? ஏனென்றால் அந்தப் பெண் ஏன் எழவில்லை என்று நீங்கள் ஆச்சரியப்பட்டீர்கள், இல்லையா? பாருங்கள், அவள் அதைத் தவறவிட்டாள், ஏனென்றால் தூதன் அவளை விட்டு உங்களிடம் வந்து கொண்டிருந்தார். அது சரியல்லவா? அதுவாக இருந்தால் உங்கள் கையை அசைக்கவும், உண்மையான வினோதமான உணர்வு. அது சரி. சகோதரனே, அப்போது அது உங்களோடு முடிந்தது. உங்கள் விசுவாசம் தரிசனத்தைப் பெற்றது. ஆமென். 100 அவர் அற்புதமானவர் இல்லையா? ஓ, என், நமது கர்த்தராகிய இயேசுவைப் போல வேறு யாருமில்லை. விசுவாசம் வையுங்கள். சரி. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களிடம் பேச வேண்டும், ஏனென்றால் அது-இதோ இருக்கிறது. நீங்கள் வேறொருவருக்காக இங்கே வந்திருக்கிறீர்கள். அது உங்களுக்காக அல்ல. நான் இப்போது அதைப் பார்க்கிறேன்; அது-அது ஒரு-அது ஒரு இளைஞன். மேலும் அந்த இளைஞன் மருத்துவமனையில் இருக்கிறான். மேலும் அவன் ஏதோ ஒரு வகையான சீருடை அணிந்திருக்கிறான். அது ஒரு-அது ஒரு விமானப்படை சீருடை போலத் தெரிகிறது. அவன்-அவன் விமானப்படையில் இருக்கிறான். அவனது கழுத்து, அல்லது ஏதோ ஒன்று காயம்பட்டுள்ளது-உடைந்தது-உடைந்திருக்கிறது. மேலும் நீங்கள் இங்கே, அந்த இளைஞன் மீது அக்கறை கொண்டிருக்கிறீர்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது. உங்கள் கையில்-புயத்தில் நீங்கள் வைத்திருக்கும் கைக்குட்டையை, சென்று அந்த கைக்குட்டையை எடுத்து, அவனுக்கு அனுப்புங்கள். அதை அவன் மேல் வையுங்கள். தேவன் மேல் விசுவாசம் வையுங்கள், அந்தப் பையன் அதிலிருந்து வெளியே வருவான், மேலும்-சுகமடைவான். 101 சரி, நண்பரே... நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள், ஆனால் கிறிஸ்துவிடம் அந்நியர்கள் அல்ல. இருதயக் கோளாறுடன் அங்கு வரிசையின் முடிவில் அமர்ந்திருக்கும் அந்த ஒல்லியான நபரே... ஆம், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, ஐயா? உங்கள் நுரையீரலிலும் ஏதோ குறைபாடு உள்ளது. இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் இங்கு மேடையில் நின்றதை நான் கண்டேன், நீங்கள் உங்கள் இருக்கைக்குத் திரும்பிச் சென்றபோது நான் உங்களைப் பின்தொடர்ந்தேன். நீங்கள் அங்கே அமர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் உங்களைச் சுகமாக்கினார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் கேட்டதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சென்று சுகமடையுங்கள். ஓ, அவர் ஆச்சரியமானவர் அல்லவா? இந்தப் பெண்மணி எனக்கு அந்நியமானவர். என் வாழ்நாளில் நான் இவரைப் பார்த்ததே இல்லை. நாம் ஒருவருக்கொருவர் முற்றிலும் அந்நியர்கள். அப்படித்தானே, அம்மா? நாம் நிச்சயமாக அப்படித்தான். இதோ நாம் இங்கே இருக்கிறோம். சிறிது நேரத்திற்கு முன்பு நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அதாவது இந்த மதியமோ அல்லது இன்றிரவு ஆராதனையிலோ, கறுப்பின மக்களைப் பற்றி நான் ஏதோ பேசிக் கொண்டிருந்தேன் என்று நான் நம்புகிறேன். அந்த இளம் அடிமை தன்னை எவ்வாறு நடத்திக்கொண்டான், ஏனென்றால் அவன் ஒரு--அவன் ஒரு--அவன் ஒரு ராஜாவின் குமாரனாக இருந்தான். நாமும் அவ்வாறே நம்மை நடத்திக்கொள்ள வேண்டும். 102 நான் உங்களுக்கு அந்நியனாக இருக்கிறேன், நீங்கள் எனக்கு அந்நியராக இருக்கிறீர்கள், நாம் ஒருவரையொருவர் அறியாமல் இங்கே ஒன்றாக நிற்கிறோம், நீங்கள் ஒரு கறுப்பினப் பெண்மணி, நான் ஒரு வெள்ளையின மனிதன், இருந்தும் நாம் இருவரும் கர்த்தராகிய இயேசுவின் மேல் அன்பாக இருக்கிறோம்... நம் இருவரையும் இரட்சித்து, ஒரே பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல அவர் மரித்தார். ஒரு நாள் இவையெல்லாம் முடிந்துவிடும், சகோதரி. இனி நாம் ஒருவருக்கொருவர் நின்று ஜெபிக்க மாட்டோம். இயேசு வருவார். அவரைத்தான் நாம் நேசிக்கிறோம், அதையேதான் இங்குள்ள மக்களிடம் நான் சொல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் துன்பப்படுகிறீர்கள்; நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்க முயற்சிப் பதைப் பார்க்கிறேன். ஆனால் உங்களால் அதைச் செய்வது கடினமாக இருக்கிறது; உங்களுக்கு மூட்டுவலி (arthritis) உள்ளது. அது சரிதான். இப்போது தரிசனம் நகர்கிறது; உங்கள் வாழ்க்கையை நீங்கள் மறைக்க முடியாது. நீங்கள் ஒரு மேசையிலிருந்து, குறிப்பாக எண்ணெய் மிகுந்த உணவுகள் போன்ற வற்றிலிருந்து விலகிச் செல்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வயிற்றுக் கோளாறு உள்ளது. அது சரிதான். மேலும் நீங்கள்--நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் அதீத பதட்டமாக இருக்கிறீர்கள். சில சமயங்களில் நீங்கள் இங்கிருந்து போய்விடப் போகிறீர்கள், உங்கள் புத்தியை இழந்துவிடப் போகிறீர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதுதான் உங்கள் வயிற்றுக் கோளாறுக்குக் காரணமாக இருக்கிறது, ஏனென்றால் அது உங்கள் வயிற்றை ஒரு தசைப்பிடிப்புக்கு உள்ளாக்குகிறது. உங்களுக்கு அஜீரணக் கோளாறு (dyspepsia) போன்ற ஒன்று உள்ளது, நீங்கள் சாப்பிடும்போது அந்தப் பொருட்கள் உங்கள் வாய்க்குள் மேலே வருகிறது. 103 மேலும் சொல்லுங்கள், நீங்கள்--நீங்கள் இங்கிருந்து வந்தவர் அல்ல. பாய்கின்ற ஒரு--ஒரு--பெரிய நதிக்கரையில் நீங்கள் வாழ்கிறீர்கள். லூயிஸ்வில்லியில் உள்ள 4-வது தெருவில் நீங்கள் செல்வதை நான் பார்க்கிறேன். நீங்கள் கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லியிலிருந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் தான். ஆம், ஐயா. நீங்கள் திருமதி. ஆல்பர்ட்டா, உங்கள் கடைசிப் பெயர் லீ. அது சரிதானே? இப்போது, உங்கள் பதட்டம் நீங்கிவிட்டது, அது சரிதானே? நீங்கள் சுகமாகிவிட்டீர்கள்; நீங்கள் இப்போது வீட்டிற்குச் செல்லலாம், இயேசுவின் நாமத்தில் நலமாயிருங்கள். "ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று சொல்வோமாக. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசம் வையுங்கள். நியாயமான காரியமே, நண்பர்களே. இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். அம்மா, அந்தப் பெண்கள் தொடர்பான வியாதியிலிருந்து நீங்கள் விடுபட விரும்பு கிறீர்களா? உங்கள் கையை உயர்த்தி, "நான் இயேசுவை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். ஆமென். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துச் செல்லுங்கள், நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்-நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். 104 நீங்கள் அவரை முழு இருதயத்தோடு நேசிக்கிறீர்களா? அப்படியானால் அவரை முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். தேவன் உங்கள் கண்களைச் சுகமாக்கி, உங்களை நலமாக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள், அல்லவா? நிச்சயமாக, தொடர்ந்து அவரை விசுவாசியுங்கள். "கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்" என்று சொல்லுங்கள். நீங்கள் குருடராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை; நீங்கள்--நீங்கள் பார்க்க வேண்டும் என்றும், எல்லாவற்றையும்--எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இப்போது உங்கள் முழு இருதயத்தோடும் அவரை விசுவாசியுங்கள். சென்று, சுகமடையுங்கள். சகோதரி, மரணத்தின் நிழல், அது புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் தேவன் சர்வ வல்லமையுள்ளவர். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் அந்தப் புற்று நோயை, அது எந்த அளவிற்குச் சாக முடியுமோ அந்த அளவிற்கு, இப்போதே கொன்றுவிட முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் அந்தக் காரியத்தைக் கண்டிக்கிறேன். அது இந்தப் பெண்மணியை விட்டு வெளியேறுவதாக. ஆமென். இப்போது உங்கள் முழு இருதயத் தோடும் விசுவாசித்துச் செல்லுங்கள், "உமக்கு நன்றி, கர்த்தராகிய இயேசுவே...?..." என்று சொல்லிக் கொண்டே செல்லுங்கள். 105 தேவன் இருதயக் கோளாறையும், வேறு எதையும் சுகமாக்க முடியும்; அவர் எல்லாவற் றையும் நலமாக்க முடியும். இளம் பெண்ணே, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்தி, "நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று சொல்லுங்கள். ஒரு நரம்புத் தளர்ச்சி நிலையே அதை உங்களுக்குக் கொண்டு வருகிறது. இப்போது விசுவாசித்துச் செல்லுங்கள், நீங்கள் குணமடைவீர்கள், இனி அது உங்களுக்கு இருக்காது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். நம் தேவனுக்கு மூட்டுவலி என்பது என்ன? அவர் உங்களைச் சுகமாக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், ஒரு இளம் பெண்ணைப் போல இங்கே குறுக்கே நடந்து வாருங்கள், சென்று சுகமடையுங்கள்-முழுமையாகச் சுகம டையுங்கள். ஆமென். தாயே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான்... சபையார் மத்தியில் அபிஷேகம் மிகவும் பலமாகிக் கொண்டிருக்கிறது, நான் மிகவும் பலவீனமாகிக் கொண்டிருக்கிறேன், என்னால் இங்கே நிற்பது கடினமாக இருக்கிறது. ஆனால் அந்த-சரியாக இங்கே அமர்ந்திருக்கும் ஒரு நபருக்கு குடல் (colon) கோளாறு போன்ற ஒன்றை நான் காண்கிறேன், ஒரு குடல், நகர்கிறது... ஆம், அம்மா, நான்... உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் விசுவாசிக்கிறீர்களா? ஒரு பெரிய மருத்துவமனையை, மேயோ பிரதர்ஸ் மருத்து வமனை (Mayo Brothers Clinic) போன்ற ஒன்றை நான் காண்கிறேன். நீங்கள் மேயோ பிரதர்ஸ் மருத்துவமனைக்கு, அல்லது அது போன்ற ஏதோ ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருக் கிறீர்களா, அது--அது நகர்ந்தது, நான் ஒரு--ஒரு பெரிய கோபுரம் போன்ற ஒன்றைக் காண்கிறேன். இயேசு உங்களைச் சுகமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா, அம்மா? அப்படியானால் நீங்கள் எழுந்து நின்று, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆமென். அல்லேலூயா! தேவனிடத்தில் விசுவாசம் வையுங்கள். 106 பில்லி, இவர்தான் உனது அடுத்த நோயாளியா? விசுவாசம் வையுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இப்போது சுகமாக்கப் பட்டுவிட்டீர்கள் என்று நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அப்படியானால், "உமக்கு நன்றி, கர்த்தராகிய இயேசுவே" என்று சொல்லிக் கொண்டே மேடையை விட்டு இறங்கிச் செல்லுங்கள். இனி நீங்கள் ஒருபோதும் அந்த நீரிழிவு--அந்த இன்சுலினையோ அல்லது வேறு எதையுமோ எடுக்க வேண்டியதில்லை. நீங்கள் அதை விசுவாசித்தால், இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குவார். ஆமென். "தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக" என்று சொல்வோமாக. ஓ, ஆச்சரியமே, இப்போது சபையார் மத்தியில், இது எத்தகைய தருணம். கிறிஸ்துவ அன்பில் நம் இருதயங் களைப் பிணைக்கும் அந்தப் பந்தம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டது. சர்வ வல்லமையுள்ள தேவனின் வேதாகமத்தின்படியும், உயிர்த் தெழுந்த இயேசு கிறிஸ்துவின் உறுதிப் படுத்தலின்படியும் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்வதற்கு, இன்றிரவு உங்கள் இருதயத்தில் எனக்குக் கிருபை கிடைத்திருக்குமானால், அவர் இங்குள்ள ஒவ்வொரு நபரையும் சுகமாக்குவார். நீங்கள் அதை விசுவாசிக்க முடியுமானால், அவர் அதைச் செய்திருக்கிறார். 107 அம்மா, நீங்கள் நோயாளியா? உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? இயேசு உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன வியாதி என்று நான் உங்களிடம் சொன்னால், மற்றும் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பதால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் ஒரு விபத்தினால் துன்பப்படுகிறீர்கள். நீங்கள் கீழே விழுந்துவிட்டீர்கள், அது உங்களுக்குள் ஏதோ கிழிந்து தளர்ந்துபோனது போலவும், இன்னும் சில காரியங்களும், மற்றும்... இல்லை, அது உங்களுக்குப் பின்னால் இருக்கும் பெண்மணி: அது அங்கு பின்னால் வரும் ஒரு தரிசனம், அது சொல்கிறது... இதோ அந்தப் பெண்மணி இங்கேயே இருக்கிறார். அது சரிதான். அம்மா, உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. உள்ளே செல்லுங்கள்... உங்கள் விசுவாசம் உண்மையில் உங்களை முழுமையாக்கும். அது... இருக்கும்போதே, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்று சொல்வோமாக. அல்லேலூயா! அவர் இங்கே நிற்கிறார். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது மிக விரைவாக எழுந்து, நீங்கள் இருக்கும் இடத்திலேயே, அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்... நாம் ஜெபிக்கும் இந்த வேளையில், இப்போதே அவரை நோக்கி உங்கள் கைகளை உயர்த்துங்கள். 108 ஓ தேவனே, பரலோகப் பிதாவே, தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், இந்த நேரத்தில், கர்த்தாவே, இந்த சபையார் மீது உமது ஆசீர்வாதங்களை ஊற்றுவீராக. சர்வ வல்லமையுள்ளவரே, ஓ தேவனே, பிரசன்னமாகி நின்று, இந்த சபையார் மீது இரக்கமாயிரும், அவர்கள் ஒவ்வொரு வரையும் சுகமாக்கும். தேவ குமாரனாகிய இயேசுவின் மூலமாக நான் இதைக் கேட்கிறேன், கர்த்தாவே, இதை அருளுவீராக. இப்போது, உங்கள் கைகளை காற்றில் உயர்த்தியபடி. இப்போது அனைவரும், உங்கள் கைகளை உயர்த்துங்கள். உங்கள் கைகளை உயர்த்தி வையுங்கள், நான் உங்களுக்குச் சொல்வதைச் செய்யுங்கள். இப்போது, இந்த வார்த்தைகளை என் பின்னால் திரும்பச் சொல்லுங்கள், "கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். சாத்தானே, நீ தோற் கடிக்கப்பட்டுவிட்டாய். இயேசுவின் நாமத்தில் நான் சுகமாக்கப்பட்டேன்." [சபையார் சகோதரர் பிரன்ஹாம் பின்னால் திரும்பச் சொல்கிறார்கள்] இப்போது அவருக்குத் துதிகளைச் செலுத் துங்கள், நீங்கள் கேட்பதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். வழக்காடுவோம் வாருங்கள் (55-1004) 2